Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய பட்ஜெட் 2017-18 : பிப்ரவரி 1ம் தேதி தாக்கல்

 மத்திய பட்ஜெட் 2017-18 : பிப்ரவரி 1ம் தேதி தாக்கல்
 
2017-18 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. 
பட்ஜெட் கூட்டத் தொடர் 2017 ஜனவரி 31-ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 31-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
 
பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி 2-ம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத் தொடர்  3 கட்டங்களாக நடக்கிறது.  இதில் முதல் கட்டம் ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் வரை நடக்கிறது.
 
92 ஆண்டுகளாக ரயில்வேக்கு  தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் பொது பட்ஜெட்டிலேயே ரயில்வே பட்ஜெட்டையும் சேர்த்து தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close