Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன. 31– ல் தொடக்கம்: அதிகாரபூர்வ அறிவிப்பு


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 ம் தேதி தொடங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் ஆண்டு தோறும் ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதத்தில் நான்காவ வாரம் தொடங்கும். முதலில் ரெயில்வே பட்ஜெட், அடுத்து பொருளாதார ஆய்வு அறிக்கை, தொடர்ந்து பொது பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.


பொது பட்ஜெட், பிப்ரவரி மாத இறுதி நாளில் தாக்கல் செய்யப்படும். இதனால், பட்ஜெட் தொடர்பான பணிகள் மே மாதம் மத்தியில்தான் நிறைவு பெறும். இந்த நிலையில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, ஏப்ரல் 1 ம் தேதி நிதி ஆண்டு தொடங்குகிறபோது, பட்ஜெட்டும் அமலுக்கு வந்துவிடும் விதத்தில் பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்து, அது தொடர்பான பணிகளை மார்ச் மாதத்துக்குள் முடித்துவிட திட்டமிட்டுள்ளது. இதற்காக பட்ஜெட் கூட்டத் தொடரை வழக்கத்துக்கு மாறாக ஜனவரி 31 ம் தேதி கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


பிப்ரவரி 1 ம் தேதி ரெயில்வே பட்ஜெட்டுடன் இணைத்து பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனவரி 3ம் தேதி டெல்லியில் கூடி முடிவு எடுத்தது.


இது தொடர்பான பரிந்துரை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. திட்டமிட்டபடி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனவரி 31 ம் தேதி தொடங்குகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிக்கையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் புதிய ஆண்டில் முதல் முறையாக கூடுவதால், ஜனவரி 31–ம் தேதி நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்கவை கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுகிறார். பட்ஜெட் பிப்ரவரி 1–ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close