Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்ஜெட் 2017: நிறுவன வரி குறைக்கப்படுகிறது..!

கடந்த 2015-ம் ஆண்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி  பட்ஜெட் அறிவிப்பில்  நிறுவன வரி 30 சதவிகிதத்திலிருந்து  2018 ம் ஆண்டுக்குள் 25% ஆக குறைக்கப்படும் என தெரிவித்தார்.  இப்படி செய்வதால் இந்திய நிறுவனங்கள் உலக அளவில் போட்டி போடுவதற்கும் உதவியாக இருக்கும் என்றார். 
 
"நிறுவன வருமான வரி, சலுகைகள் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. அது சரி செய்யப்பட வேண்டும்" என்கிறார் இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி. 
தற்போது நிறுவனங்களுக்கு 32 வகையான வரிச் சலுகைகள் உள்ளன.  நிறுவன வருமான வரி தீர்வைகள், கூடுதல் வரிகள் என எல்லாம் சேர்ந்து மொத்தம் 33.99% ஆக உள்ளது. . வரிச் சலுகைகள் அனைத்தையும் பயன்படுத்தும் நிலையில் 24.67% வரியை இந்திய நிறுவனங்கள் செலுத்துகின்றன. 
 
தற்போது குளிர்பதன அலகுகள், விவசாய விளைபொருட்கள் சேமிப்பு கிடங்குகள், குறைந்த  பட்ஜெட் கட்டுமான திட்டங்கள், உர தயாரிப்பு போன்ற நிறுவனங்கள் 150% வரை மூலதன செலவினத்தில் வரி விலக்கு வழங்கப்படுகிறது. இதைத்தவிர, மின்சார தயாரிப்பு, மின் வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் போன்றவற்றிற்கும் வரிச் சலுகை காலம் இருக்கிறது. . 
 
தற்போது ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல் பணிக்கான செலவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இது 2017-18 பட்ஜெட்டில் விலக்கிக்கொள்ளப்படலாம் என்கிறார்கள்.  நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நிறுவன வரி விகிதத்தை 1.25 முதல் 1.5 புள்ளிகள் குறைத்து  28.75- 28.5 ஆக குறைக்கக்கூடும். 
 
பட்ஜெட் 2017-18-ல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சிறப்பு சலுகைகள் -  கர்நாடகா முதலமைச்சர் 
பெங்களூரூவில் நடந்த  14-வது வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசா கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருக்கிறார் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா. 
 
அவர் மேலும் பேசும் போது, 'தற்போது அமெரிக்காவில் ஹெச்-1பி விசா முறையில் மாற்றம் கொண்டு வந்து இருக்கிறார்கள். இங்கிலாந்தில் வெளிநாட்டில் இருந்து ஏன் திறமையான பணியாளர்கள் வர வேண்டும் என்ற கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் திறமையான பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதற்கு எதிராக மத்திய அரசு குரல் கொடுக்க வேண்டும். மேலும் மத்திய அரசின் பட்ஜெட் 2017-18-ல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டும்.  
 
இடம் பெயர்ந்தோருக்கும், கர்நாடகாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதனால் வெளிநாடு இந்தியர்கள் குறித்த கொள்கையில் மாற்றம் வேண்டும். இதற்காக நாங்களும் வெளிநாட்டு இந்தியர்களுக்கான அமைப்பினை உருவாக்கி இருக்கிறோம். இந்த அமைப்பு முக்கியமான அமைப்பாகச் செயல்பட்டு வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே இணைப்பினை பலப்படுத்தியும், இதன் மூலம் ஊக்கம் பெற்று கர்நாடகாவிற்கு வெளிநாடுகளில் இருந்து இருந்து முதலீடு வருகிறது. 
 
தற்போது கர்நாடகாவில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கொள்கையினை அறிமுகம் செய்து இருக்கிறோம். இதன் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களையும், இதர வெளிநாட்டவர்களையும் வலிமையான இணைப்பு பாலத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். இதன் மூலம் முன்நோக்கி செல்வதற்கான வாய்ப்புகளையும், வளர்ச்சியையும், வளமையையும் கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மார்ச் 31 தேதிக்கு பின்பும் பழைய ரூபாய் தாள்களை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும்' என்றார்.
 
ஞா. சக்திவேல் முருகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close