Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறை எதிர்பார்ப்புகள்

அனுஜ் பூரி, தலைவர், ஜேஎல்எல் இந்தியா . 

1. வீட்டுக் கடன் வட்டியில் சலுகை  : தேவை விளக்கம்..!
வீட்டுக் கடன் வட்டியில் சலுகை அளிக்கும், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின்  கீழ் பயனாளிகள் பயன் பெறுவதற்கான தெளிவான விளக்கம் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும்
அண்மையில் பிரதமர் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 9 லட்சம் ரூபாய்க்கான கடன் திட்டத்தில் 4% வட்டி மானியமும், 12 லட்ச ரூபாய் வரை கடன் திட்டத்தில் 3% வட்டி மானியமும் வழங்கப்படும் எனவும் அறிவித்து இருக்கிறார். இதன் மூலம் இரண்டு வருமான பிரிவினர் அதிகளவில் கடன் பெற முடியும். இதற்கும் மானியமும் பெற முடியும்.  இந்த பட்ஜெட்டில் இதில் பயன்பெறுவதற்கான விதிமுறைகள் குறித்து தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும். 
 
உதாரணத்திற்கு, இப்போது நகரத்தில் பணியாற்றும் இளைஞர்கள் சொந்தமாக அடுக்குமாடி வீட்டை (ஃபிளாட்) வாங்க முடியும். அவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய அல்லது குறைந்த வருமானம் கொண்டவர்கள் பிரிவில் சேர்ந்து வாங்க முடியுமா என்பது குறித்த தெளிவு வேண்டும். 
மேலும் நகரங்களின் புறநகர் பகுதிகளிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் மலிவு விலையில் வீடுகள் கிடைக்கின்றன. குறிப்பிட்ட அபிவிருத்தி திட்டங்கள் மூலம் கட்டப்படும் வீடுகள் இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியுமா என்பது குறித்தும் தெளிவு பெற வேண்டும். 
 
2. முதல் முறை வீட்டு வாங்குபவர்களுக்கு வருமான வரிச் சலுகைகள் 
முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் மலிவான விலையில் கிடைக்கும் வீடுகளை வாங்கும் போது அவர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் கூடுதல் வருமான வரிச் சலுகைகள் பெற முடியுமா? என்பது குறித்து நிதிநிலையில் குறிப்பிட்ட வேண்டும். 2022-யில் அனைவருக்கும் வீடு திட்டம் எந்த திசையில் எவ்வளவு தூரம் சென்றிருக்கிறது என்பது குறித்த விவரங்கள் வேண்டும். 
எந்த விதிமுறையும் இல்லாமல் இந்தியாவில் வாடகை வீடுகளுக்குச் செயல்பட்டு வருகின்றன. இனி வாடகை வீட்டில் வசிப்பதை விட, வாடகை கொடுக்கும் தொகையில் சொந்த வீட்டிற்கான  தவணை செலுத்த முடியும் என்ற வகையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். இது போல் கொண்டு வருவதற்கு வீடு கட்டமானப் பணியில் இருப்பவர்களும் முன்வர வேண்டும். 
 
3. வீடு காப்பீடு பிரீமியம் மீது அதிக வரிச் சலுகை..!
மெட்ரோ நகரங்களில் வீடு வாங்குபவர்களுக்கு வீட்டுக் கடனுக்கு அதிக அளவில் வரி விலக்கு வழங்க வேண்டும். உதாரணத்துக்கு, தற்போது, நிதி ஆண்டில் திரும்பக் கட்டும் வட்டியில்  இரண்டு லட்ச ரூபாய் வரை மட்டும் வரி விலக்கு வரம்பு இருக்கிறது. மும்பையில் வீட்டின் மதிப்பு  கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது. ஆனால் வரி விலக்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீட்டுக் காப்பீடு பிரீமியத்துக்கு வரிச் சலுகை வழங்கி அனைத்து வீடுகளுக்கும் காப்பீடு செய்ய ஊக்குவிக்கலாம். இதற்காக லட்ச ரூபாய்க்கு அதிகமாக வரி விலக்கு வரம்பை அதிகரிக்கலாம். மேலும், பணவீக்க போக்குகளுக்கு பொறுத்து தானாக கூடுதல் வரி விலக்கு அமைக்கும் வகையில் இருக்க வேண்டும். 
 
4. ஜிஎஸ்டி குறித்த தெளிவு 
பொருள்கள் மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ரியல் எஸ்டேட்,   கட்டுமான தொழிலுக்கு எந்த விதமான வரி விதித்து இருக்கிறார்கள் என்பதை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.
 
5. தனிநபர் வருமான வரி..!
உயர் நாணய பண மதிப்பு நீக்கத்தால் சாதாரண மக்களுக்கு பட்ஜெட்டில் ஏதாவது நன்மை கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக,  வரி விலக்கு  அடிப்படை வரம்பை  உயர்த்த வேண்டும். மேலும் தற்போது பெரு நிறுவனங்களுக்கு வரி குறைக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். இதைப் போல் தனி மனிதருக்கான வருமான  வரியையும் குறைக்க வேண்டும்.  அப்போதுதான் அவர்களின் சேமிப்பு அதிகரித்து சொந்த வீடு வாங்க முடியும்..தனிநபர் வருமான வரி விதிப்பை எளிதாக்க வேண்டும்.
இப்போது அரசு, வெளிப்படையான செயல்பாடுகளை எதிர்பார்க்கிறது. இதற்கு எளிமையான வரி கணக்கு தாக்கல் குறித்துக் கட்டமைப்பை இந்த  பட்ஜெட்டில் எதிர்க்கிறோம். 
 
6. வீட்டு வாடகை  படி வரம்பை உயர்த்த வேண்டும் 
பணியாற்றுபவர்களுக்கு சம்பளத்துடன் வீட்டு வாடகைபடியும் வழங்கப்படுகிறது. இந்தத் தொகைக்கு விலக்கு கோர முடியும். இந்த தொகை அவர்கள் கொடுக்கும்  வீட்டு வாடகையை அதிகமாக இருக்கும்.  ஆனால்,  80ஜிஜி பிரிவின்  வீட்டு வாடகைபடியில் மாதம் ரூ. 2,000 ரூபாய் மட்டுமே வரி விலக்கு கோர முடியும். இதனை பட்ஜெட்டில் மாற்ற வேண்டும். 
- தொகுப்பு : ஞா. சக்திவேல் முருகன் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close