Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2017 பட்ஜெட் - ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதிர்பார்ப்பு ..!

 
வரும் 2017-18 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்னென்ன எதிர்பார்க்கின்றன என்பது குறித்து கணக்கு தணிக்கையாளர் மற்றும் தென்னிந்திய கணக்கு தணிக்கையாளர் குழுவின் மண்டல உறுப்பினர் கோபால கிருஷ்ண ராஜூ விளக்கி சொன்னார்.
 
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஐந்து வருடங்களில் முதல் மூன்று வருடங்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது. 2016-ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு அந்த நிறுவனம் ஈட்டும் லாபத்திற்கு வருமான வரி கிடையாது.
 
இந்த சலுகையை 2021-ம் ஆண்டு மார்ச் 31 -ம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.) ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் மூன்று வருடத்தில் வளர்வது என்பது மிகவும் குறுகிய காலமாக இருக்கிறது. 100 நிறுவனங்களில் 10% நிறுவனங்கள் தான் மூன்று வருடங்களில் லாபம் கூட்டும் வகையில் அமைந்து இருக்கின்றன.
 
இதனால் 90% நிறுவனங்கள் பயனடைவதில்லை. இதனால் மூன்று வருடத்தில் இருந்து ஐந்து வருடங்கள் என்றும், ஐந்து வருடங்கள் என்பதை மாற்றி பத்து வருடங்கள் மத்திய அரசு ஐந்து வருடங்கள் வரை (2016 முதல் 2021 வரை இந்த சலுகையினை பயன்படுத்திக்கொள்ள என்று சொல்லி இருக்கிறது.
 
ஐந்து வருடங்கள் என்பது மிகவும் குறைவு என்பதால் பத்து வருடங்கள் வரை நீட்டிக்க வேண்டும்) என்று மாற்றினால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவிக்கரமாக இருக்கும்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவி செய்யும் இன்குபேட்டர், வென்சர் கேப்பிட்டல், ஏஞ்சல் நெட்வோர்க்ஸ் போன்றவர்களுக்கும் வரி விலக்கு எதிர் நோக்கி இருக்கிறார்கள். வெஞ்சர் கேட்பிட்டலில் இருப்பவர்களுக்கு 25 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே வரி விலக்கு வழங்கப்படுகிறது.
 
இதனைக் குறைத்து சிறு நிறுவனங்களுக்குச் சிறு அளவில் முதலீடு செய்யப்படும் தொகைக்கும் வருமான வரிச் சலுகை வழங்கினால் மட்டுமே ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் முதலீடு வரும்.
 
இதைப்போலவே ஏஞ்சல் நெட்வோர்க்ஸ் போன்ற நிறுவனங்களின் வருமானத்திற்கு வரிச் சலுகை வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
 
- ஞா. சக்திவேல் முருகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close