Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2017 பட்ஜெட் - ரியல் எஸ்டேட் துறை எதிர்பார்ப்புகள் ..!

 
ரும் 2017-18 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறை என்னென்ன எதிர்பார்க்கிறது என்பது குறித்து கணக்கு தணிக்கையாளர் மற்றும் தென்னிந்திய கணக்கு தணிக்கையாளர் குழுவின் மண்டல உறுப்பினர் கோபால கிருஷ்ண ராஜூ விளக்கி சொன்னார்.
 
ரியல் எஸ்டேட் துறையில் சிங்கிள் விண்டோ கிளியரன்ஸ் முறையினைக் கொண்டுவருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது கார்ப்பரேஷன், தீ அணைப்பு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என ஐம்பதுக்கும் மேற்பட்ட துறைகளில் அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது. இதை ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ‘சிங்கிள் விண்டோ கிளியரன்ஸ்’ முறையில் கொண்டுவரும்போது இந்தத் துறையில் நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
 
முதன்முறை வீடு வாங்கும் நபருக்குக் கூடுதல் வரிச் சலுகை கிடைக்க வேண்டும். இது ஏற்கெனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்தது. அதன் காலம் முடிந்துவிட்டது. ரூ.40 லட்சத்துக்கு வீடு வாங்க வேண்டும், கடன் ரூ.25 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்ற நிபந்தனை இருந்தது. இதனை வாங்கும்போது கணவர் பெயரில் ரூ.15 லட்சமும், மனைவி பெயரில் ரூ.15 லட்சமும் கடன் வாங்கிக் கொள்ளலாம். இவர்கள் இருவரும் வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம்.
 
இது காகிதத்தில் மட்டுமே இருந்த திட்டம். காரணம், பெரிய நகரங்களில் ரூ.40 லட்சத்தில் வீடு வாங்க முடியாது. புறநகர்ப் பகுதியில் மட்டுமே வாங்க முடியும் என்பதால், நகரத்தில் இருப்பவர்கள் பயன்படுத்த முடியாமல் இருந்தார்கள்.
 
தனிநபர் வீடு வாங்கும்போது வீட்டுக் கடனில் திரும்பக் கட்டும் அசல் மற்றும் வட்டிக்கு வரிச் சலுகை வழங்கப்படுகிறது. தற்போது வீடு வாங்கும்போது கண்டிப்பாக இன்ஷூரன்ஸ் எடுக்கச் சொல்கிறார்கள். ஹோம் இன்ஷூரன்ஸ், லைஃப் இன்ஷூரன்ஸ் எடுக்கச் சொல்கிறார்கள். இதனையும் வரிச் சலுகையில் சேர்க்க வேண்டும். ஒரு சிலர் லைஃப் இன்ஷூரன்ஸ் மட்டும் எடுப்பார்கள்.
 
ஆனால், வீட்டின் பெயரில் இன்ஷூரன்ஸ் செய்வதில்லை. இரண்டு இன்ஷூரன்ஸ்கள் எடுப்பது நல்லது. இதுபோல் எடுக்கும்போது இயற்கைச் சீற்றத்தினால் வீட்டுக்கு ஏதேனும் சேதாரம் ஏற்பட்டாலும் நிவாரணம் பெற முடியும். இனிவரும் காலங்களில் வீட்டின் பெயரில் இன்ஷூரன்ஸ் செய்வதற்கும் வரி விலக்கு வழங்க வாய்ப்பு இருக்கிறது.
 
ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்தும்போது ரியல் எஸ்டேட் பிரிவுக்கு இன்னும் கொஞ்சம் தெளிவு தேவைப்படுகிறது.
 
முதலில் இடம் வாங்கும்போதும், வீடு கட்டுவதற்கான பொருட்கள் வாங்கும்போதும் சுமார் 2-4% வரி கட்டுகிறார்கள். அதன்பின்பு வீடு கட்டி முடித்து விற்கும்போதும் வரி கட்டுகிறார்கள். இறுதி நிலையில் வரி கட்டும்போது ஆரம்ப நிலையில் கட்டிய வரியைக் கழித்து விட்டு வரி செலுத்துவதாக இருந்தால் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் பெருமளவில் பயனடைவார்கள். இதை, வரும் பட்ஜெட்டில் கொண்டு வரும்போது வீடுகளின் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனால் வீடு வாங்குபவர்களும் பயனடைவார்கள்.
 
- ஞா. சக்திவேல் முருகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close