Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்ஜெட் எதிர்பார்ப்பு - என்ன சொல்கிறார்கள் சிறு, குறு தொழில்துறையினர்?

 

ரும் பிப்ரவரி மாதத்தில் 2017-18 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்ய இருக்கிறார். கடந்த 2016-ல் நடந்த பல நிகழ்வுகள் இந்தியப் பொருளாதாரத்தைத் தலைகீழாக மாற்றிவிட்டது. சர்வதேச சந்தைகள் சுணக்கத்தில் இருப்பதால், பொருளாதார வளர்ச்சி ஏற்கெனவே, மந்த நிலையில் இருந்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் ஜெயித்தது, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற நடவடிக்கை ஆகியவற்றால் இந்தியப் பொருளாதாரம் நிலையற்ற தன்மைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. 

இந்தச் சூழ்நிலையில் விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கும் 2017-18 பட்ஜெட் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தொழில்துறையினர் இந்த பட்ஜெட்டில் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள பல்வேறு தொழில்துறை சங்கங்களின் பிரதிநிதிகளிடம் பேசினோம். அவர்கள் தங்களின் எதிர்பார்ப்புகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள்.

  சாதகமான ஜிஎஸ்டி! 

சிறு மற்றும் குறுந்தொழில்முனைவோர்கள் கூட்டமைப்பின் (டான்ஷியா) பொதுச்செயலாளர், சி.கே.மோகனுடன் பேசினோம்.

‘‘எஸ்எம்இ-களுக்கு அதிக முக்கியத்துவம் இந்த பட்ஜெட்டில் தரப்பட வேண்டும். ஏனெனில் முற்றிலுமாக அவர்களின் வாழ்வாதாரத்தையே கடந்த சில மாதங்களாக இழந்திருக்கிறார்கள். வாங்கிய கடனுக்கு வட்டிகூடச் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். எனவே, வாராக் கடனுக்கு இருக்கும் விதிமுறைகளைச் சற்று தளர்த்த வேண்டும். தற்போது 90 நாட்களுக்கு வட்டியோ, அசலோ செலுத்தாமல் இருந்தால், அது வாராக் கடனாக எடுத்துக்கொள்ளப்படும் என்ற வரம்பை 180 நாட்களாக உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 

மேலும், சர்பாசி சட்டத்தில் எஸ்எம்இ-களுக்கு ரூ.2 கோடி வரை வரம்பு அளிக்க வேண்டும். ரூ.2 கோடிக்கும் மேல் வாராக் கடன் இருந்தால் மட்டும் சர்பாசி சட்ட நடவடிக்கை எடுக்கும்வகையில் மாற்றம் செய்ய வேண்டும். மேலும், மாநிலங்களவை, மக்களவை இரண்டிலும், ஸ்மால் ஃபேக்டரி மசோதா, நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.


எஸ்எம்இ-களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியை ஒற்றை இலக்கத்தில் கொண்டுவர வேண்டும். மூலப்பொருட்களின் விலையை அடிக்கடி மாற்றாத வகையில் நிலையாக வைத்திருக்க ஆவணச் செய்ய வேண்டும். சென்ற பட்ஜெட்டில் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் 25 சதவிகிதம் மட்டுமே நிறைவேற்றி இருக்கிறார்கள். ஜிஎஸ்டி மசோதா சிறு தொழில்முனைவோர் களுக்கு உதவும்வகையில் திட்டமிடப்பட்டு விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும்’’ என்றார்.

- ஜெ.சரவணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close