Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்ஜெட் எதிர்பார்ப்பு - என்ன சொல்கிறார்கள் தோல் தொழில்துறையினர்?

தோல் தொழிலுக்கு முக்கியத்துவம்!

தோல் ஏற்றுமதி கவுன்சில் தலைவர் ரபீக் அகமது பேசும்போது,  ‘‘தொழிலாளர் கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும்  துறை, தோல் உற்பத்தி தொழில்துறை. மேலும், டெக்ஸ்டைல் துறைக்கு அடுத்ததாக அதிக அளவில் பெண்கள் பணிபுரியும் துறையாக தோல் தொழில்துறை உள்ளது. இப்படி எந்தெந்தத் துறைகளில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறதோ, அந்தந்தத் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

டெக்ஸ்டைல் துறையில் செயல்படுத்துவது போன்ற ‘டெவலப்மென்ட் பேக்கேஜ்’ திட்டங்கள், தோல் தொழில்துறைக்கும் வகுக்கப்பட வேண்டும். மேலும், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது தோல் தொழில்கள்தான். 

பணமில்லாப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கத் தேவையான ஸ்வைப் மெஷின் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் அவற்றுக்கான பயிற்சிகள் அனைத்தையும் அரசு முன்னெடுத்துக் கொடுக்க வேண்டும். 
மேலும், தொழிலாளர்களால் அவர் களுடைய இஎஸ்ஐ, பிஎஃப் போன்ற வற்றை எளிதில் பெற முடிவதில்லை. எந்த இடத்திலிருந்தாலும் அதனைப் பெறும் வகையிலான ஏற்பாடுகள் செய்தால் தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கும்’’ என்றார்.

- ஜெ.சரவணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close