Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்ஜெட் 2017 எதிர்பார்ப்பு : அனைவருக்கும் வீட்டு வசதி ..!

 
அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஏ.ஹென்றி கூறுகையில், ‘‘மத்திய அரசு 2015ம் ஆண்டு, ‘‘அனைவருக்கும் வீட்டு வசதி 2022’’ எனும் திட்டத்தை அறிவித்தது. நகரங்களில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 30 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள், குறைந்த வருவாய் பிரிவினருக்கு 60 சதுர மீட்டர் வரையிலான வீடுகள் கட்ட இத்திட்டத்திற்கு மத்திய அரசு உதவுகிறது. இத்திட்ட வீட்டுக்கு மத்திய அரசு இரண்டரை லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் வீடுகளை கட்டிக் கொடுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதே வரிச்சலுகைகளை இந்தியாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனங்களுக்கும் தர வேண்டும். அப்படி செய்யும் போது பொருளாதரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான வீடு கட்டுமானம் அதிகரிக்கும். வீட்டு விலையும் குறைவடையும். அனைவருக்கும் வீடு என்ற கோஷம் விரைவில் சாத்தியப்படும். 
 
முதல் வீடு, மனை வாங்குவோருக்கு வங்கி வட்டியில் சிறப்பு சலுகை தரலாம். பெண்கள், திருநங்கைகள், முதியவர்கள் வீடு வாங்கும் போது வங்கி வட்டியை பெருமளவு குறைப்பதோடு பத்திரப்பதிவு கட்டணத்தையும் பாதியாக குறைக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் பத்திரப் பதிவு கட்டணம், நிலத்தின் வழிகாட்டி மதிப்பு எல்லாம் கிடுகிடுவென உயர்த்தி இருக்கிறார்கள். இதையெல்லாம் மறு ஆய்வு செய்து பெருமளவுக்கு குறைக்க வேண்டும்.
 
ரியஸ் எஸ்டேட் ஒழுங்குபடுத்தும் சட்டம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய, நடுத்தர ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். விதவிதமான வரிகளை போட்டு இந்த தொழிலையே நசுக்கும் வகையில் பல்வேறு பெயர்களில் வரிகள் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட்
 
 
ஹென்றி
 
தொழிலில் கட்டுமானத்திற்கு வங்கிக் கடன் போக
மீதி பணத்தை வங்கியில் டெபாசிட் ஆக காட்டினால் மட்டுமே இனிமேல் கட்டடம் கட்ட கடன் கிடைக்கும் சூழல் இந்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. நண்பர்களிடம், உறவினர்களிடம் கடன் வாங்கி வீடு கட்டும் தொழிலில் இனி இறங்க முடியாத சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் உரிய மாற்றம் கொண்டு வர வேண்டும். முத்தரபு குழு அமைத்து இந்த சட்டத்தை அனைத்து பில்டர்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றி அமைக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை இந்த 2017 பட்ஜெட்டில் மத்திய அரசு வெளியிட வேண்டும்.’ என்றார். 
 
- எஸ்.முத்துகிருஷ்ணன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close