Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்ஜெட் 2017- லைவ் அப்டேட்ஸ்

பட்ஜெட் 2017 - லைவ் அப்டேட்ஸ்

11.09 வாக்கில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

 

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: 

 

 
பட்ஜெட் தாக்கலை நிறைவு செய்தார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. அவை பிப்ரவரி மூன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

 
ஜிஎஸ்டி மசோதா கிட்டதட்ட நிறைவு நிலையில் இருக்கிறது. அனைத்து தரப்பினரின் ஒப்புதலுடன் விரைவில் புதிய வரி விதிப்பு முறை நிறைவேற்றப்படும்.
 
தனிநபர் வரி வரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக வரையிலான வரி விகிதம் 10 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைப்பு

ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையுள்ள வருமானத்திற்கான வரி மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும்.

ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கு மேல் இருந்தால் 15 சதவீதம் வரி விதிக்கப்படும்.

   

நிறுவனங்கள்:

ஆண்டு வர்த்தகம் ரூ.50 கோடிக்கும் குறைவாக உள்ள நிறுவனங்களுக்கு வரி 25 சதவீதமாக குறைக்கப்படுகிறது

ரூ.50 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறு நிறுவனங்களுக்கு 5 சதவீதம் வரி குறைப்பு.
 
 

கட்சி நிதி

 

 
அரசியல் கட்சிகள் நிதியில் வெளிப்படைத்தன்மை. ரிட்டர்ன்ஸ் ஃபைல் செய்யப்பட்டிருந்தால் நிதி வழங்கியவரும் பெறுபவரும் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார். ஒருவரிடமிருந்து 2 ஆயிரத்துக்கு மேல் பணமாக நிதி வாங்க கூடாது.
 
 
 
3 லட்சத்துகும் மேலான பணப்பரிவர்த்தனைக்கு தடை.
 
பாஸ் மெஷின்களுக்கு சிவிடி, எஸ்ஏடி விலக்கு அளிக்கப்படும்.
 
 

ரியல் எஸ்டேட்:

 

 
ரியல் எஸ்டேட்டில் புரோமோட்டர்களுக்கு வழங்கப்படும் சில சலுகைகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
 
 வீடுகள் வாங்கும் வகையில் பில்டப் ஏரியாவுக்கு பதிலாக கார்ப்பட் ஏரியா கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 
அசையா சொத்துகளுக்கான மூலதன ஆதாய வரியில் மாற்றங்கள் செய்யப்படும்.
 
வீடு மற்றும் நிலங்களை வைத்திருக்கும் காலம் 3 ஆண்டுகளிலிருந்து 2 ஆண்டுகளாகக் குறைப்பு
 


 

 

வரி நடைமுறைகள்:

 

 
 

இந்தியாவில் ஜிடிபி, வரி வருமானத்துக்கும் இடையிலான விகிதம் மிகக் குறைவாக உள்ளது.வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதே காரணம். இதனால் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் வரிச்சுமை அதிகமாக இருக்கிறது.

 

 

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்தால் வரிச்சுமை குறையும்.

 

 

டீமானிட்டைசேஷன் நடவடிக்கையால் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

 

 
 

பாதுகாப்பு:

 

 
பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ. 2.74 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
 
 

மல்லையாக்கள்

 

 
கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு வெளியேறியவர்களைக் கொன்டு வரும் வகையிலும் மேலும் யாரும் அப்படி வெளியேறாத வகையிலும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

 

பென்ஷன்:

 

 
பென்ஷன் திட்டத்தில் மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்படும். பென்ஷன் தாரர்கள் எளிதில் பென்ஷனை வாங்கும் வகையில் தொழில்நுட்பம் மேம்படுத்தபடும்.
 
 
நாடு முழுவதும் 5 லட்சம் குளங்கள். வறட்சியை சமாளிக்க குளங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்படும்.
 
அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்தில் 3.5 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
 
 

ஃபைனான்ஸ்

 


அனைத்து நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் , அரசு அலுவலகங்களில் டிஜிட்டெல் பேமென்ட் முறை முழுமையாக அமல்படுத்தப்படும்.
 
ஆதார் மூலம் பேமென்ட் செய்யும் வகையில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும். டெபிட் , கிரெடிட் கார்டு இல்லாதவர்களுக்கு இது மேலும் உதவியாக இருக்கும்.
 
 

பொதுத்துறை வங்கிகளூக்கு ரீகேப்பிட்டலைஸ் செய்ய ரூ. 10 ஆயிரம் கோடி நிதி வழங்கப்படும். மேலும் அவசியமென்றால் அதுவும் திட்டமிடப்படும்.

 

 
 

ஆட்டோமெட்டிக் ரூட் வழியாக அந்நிய நேரடி முதலீடு மேம்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும். மேலும் அந்நிய நேரடி முதலீடுக்கான ரோட் மேட் விரைவில் வெளியிடப்படும். அந்நிர நேரடி முதலீட்டை ஈர்க்கும் வகையிலான தாராளமயக்கொள்கைகள் விரைவில் எடுக்கப்படும். அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் கலைக்கப்படும்.

 

 
 
 
 

டெலிகாம்:

 

 
டெலிகாம் இந்திய உள்கட்டமைப்புக்கு மிக முக்கியமானது. கிராமங்களை இணைக்கும் வகையில் பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட உள்ளன.

 நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு 3.91 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

 
 

இரயில்வே:

 

 
ஐஆர்சிடிசி மூலம் எடுக்கப்படும் இ டிக்கெடுக்குகளூக்கு சேவை வரி ரத்து.
 
இரயில்வேவில் பயணிகளுக்காக பாதுகாப்புக்கு புதிய நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஒரு லட்சம் கோடி நிதி பாதுகாப்பு திட்டங்களுக்கு ஒதுக்கப்படும்.
 
ரயில்வே துறைக்காக ரூ. 55 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படுகிறது.
 
3500 கிமீ தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன.
 
9 மாநிலங்களுடன் இணைக்கும் 70 புதிய ரயில்வே திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
 
பயோ டாய்லெட்டுகள் வைக்கப்படும்.
 
2020க்குள் ஆளில்லா ரயில்வே கேட் தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும்.
 

புதிதாக இரண்டு கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

தனியார் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்

 

சூரிய ஒளி மின் திட்டம் ரயில்வேக்களில் நடைமுறைப்படுத்தப்படும்.

 
 
பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
2019க்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும். இதற்காக ரூ. 23 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
 
 முதியோர்களின் நலனுக்காக ஆதார் கார்டில் அவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு கொடுக்கப்பட்டு அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும்.  எல்ஐசி மூலம் 8 சதவிகித உறுதியான வறுமானத்துகான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
 
குஜராத், ஜார்க்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனைகள் கொண்டுவரப்பட உள்ளன.
 
சுகாதாரத்துறையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளில் புதிய படிப்புகள் கொண்டுவரப்பட உள்ளன.
 
உயிர்காக்கும் மருந்துகள், கருவிகளுக்கான விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
ஆன்லைன் மூலம் கல்வி தரும் நடவடிக்கை மேம்படுத்தப்படும். 350க்கும் மேலான படிப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு.
 
டிமானிட்டைசேஷன் நடவடிக்கையால் வங்கிகள் கடன் விகிதத்தைக் குறைத்திருப்பது பொருளாதார வளர்ச்சிக்கு பலவகைகளிலும் உதவியாக இருக்கும்.
 
வறுமையில் இருக்கும் மக்களை மேம்படுத்துவதற்கு திட்டங்கள் வகுக்கப்படும். பெண் குழந்தைகளின் வளர்சிக்காக ரூ. 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கிராமங்களில் உள்ள பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும்.
 
பெண்கள் குழந்தைகளூக்கான நலனுக்காக வரும் நிதி ஆண்டில் ரூ. 1.84 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
 
100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி வரும் நிதி ஆண்டில் 25 சதவிகிதம் உயரும். இந்தத் திட்டத்தில் மகளிரின் பங்கு 55 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக பெருமை. 100 நாள் வேலைதிட்டத்துக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
 
இளைஞர்களுக்கு தரமான கல்வி தரப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பள்ளிகள், கல்லூரிகளில் கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். கல்லூரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு ரேக்கிங் தரப்படும்.
 
 

உயர் கல்வியில் புதிய கண்டுபிடிப்புக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். யுஜிசியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

 

 
2018 மே மாதத்துக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி தரப்படும்
 
சிறுகுறு தொழில்முனைவோர்கள் எளிதில் கடன் பெற திட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
 
நபார்ட் திட்டங்கள் மூலம் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களுக்கு பயன்படும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க புதிய திட்டம்
 
அவையில் முன்வைக்கப்படும் விமர்சனங்களூக்கு சிர்த்துக்கொண்டே பதில் அளிக்கிறார் அருண் ஜெட்லி
 
தொழில்முனைவோர்களை வளர்க்கும் பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளன.
 
விவசாயக் கடனுக்காக ரூ. 10 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது.பயிர்க்காப்பீடு திட்டத்திற்கான நிதியை 13 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படுகிறது
 
வரும் ஆண்டில் விவசாயத் துறை வளர்ச்சி 4.1 சதவிகிதமாக இருக்கும். விவசாயிகளின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனுக்காக வறட்சி கால இழப்பீட்டை 30 சதவிகிதலிருந்து 40 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது.
 
 

2019 ஆண்டில் 50,000 கிராம பஞ்சாயத்துகள் வறுமையிலிருந்து விடுவிக்கப்படும். நுண்சொட்டு நீர் பாசத்துக்கு ரூ.5000 கோடி ஒதுக்கப்படுகிறது.

 

 
கறுப்புப் பணத்தை ஒழித்து ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க பட்ஜெட்டில் 10 முக்கிய அம்சங்கள் எடுக்கப்பட உள்ளன.
 
மேலும் சீர்திருத்தங்கள் தொடரும். கடந்த வருடத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பாசிட்டிவ் விளைவுகள் வரும் ஆண்டில் நிச்சயம் தெரியும். அதேசமயம் மேலும் பல சீர்திருத்தங்கள் தொடரும்.
 
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி குறையும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் 2017-18ல் உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவிகிதம் இருக்கும்.
 
பணமதிப்பு நடவடிக்கைக்கு மக்களிடம் நல்ல ஒத்துழைப்பு இருந்தது. இதனால் வரி ஏய்ப்பாளர்கள் தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
இரட்டை இலக்க பணவீக்க விகிதம் கட்டுபடுத்தப்பட்டுள்ளது. 

இந்திய பொருளாதாரத்தில் அமெரிக்க தேர்தல் முடிவுகள், சர்வதேச சந்தைகள் மந்த நிலை, ஃபெட் வட்டிவிகிதம் ஆகியவை தாக்கத்தை ஏறபடுத்தி இருந்தாலும் ஐஎம்எஃப் கணித்துள்ளபடி 2017ம் ஆண்டில் மிக வேகமாக வளரும் நாடாக இந்தியா இருக்கும் என்று அருண் ஜெட்லி பேச்சு.

மறைந்த கேரள எம்பி அகமது அவர்களுக்கு இறங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

சுமத்ரா மஹாஜன் இறங்கல் தீர்மானம் நிறைவேற்றி முடித்தவுடன் அவையில் அமளி நடக்கிறது. பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்யுமாறு காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்படுகிறது.

அமளிக்கு நடுவிலும் நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்ய ஆரம்பித்து பேசி வருகிறார்

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close