Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வளர்ச்சி சார்ந்த பட்ஜெட் - டாக்டர் ஏ. சக்திவேல், ஃபியோ, சேர்மன், தென் மண்டலம்

டாக்டர் ஏ. சக்திவேல், ஃபியோ (FIEO), சேர்மன், தென் மண்டலம் 
 
மத்திய பட்ஜெட்  2017-18 குறித்து  ஃபியோ அமைப்பின் தென் மண்டல தலைவர் டாக்டர்  ஏ. சக்திவேல் கருத்து தெரிவித்துள்ளார். 
 
அவர் கூறும் போது, உள்கட்டமைப்பு துறையில் தனியார் முதலீடுகள் குறைந்துள்ள நிலையில், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான அரசு முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது மத்திய அரசு சரியான திசையில் பயணிப்பதாக இருக்கிறது. பட்ஜெட்டில் ரூ. 3.96 லட்சம் கோடிகள் ஒதுக்கீடு உடன் அறிமுகப்படுத்தப்பட இருக்கும், 'வர்த்தக உள்கட்டமைப்பு ஏற்றுமதி திட்டத்தை (Trade infrastructure Export Scheme) வரவேற்கிறோம். இன்றைய நிலையில் சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கூடுதலாக 7 சதவிகித அளவுக்கு செலவிடும் நிலையில் இருக்கிறார்கள்.  இந்த நிலையில், வர்த்தக உள்கட்டமைபு ஏற்றுமதி திட்டம்,  இந்திய ஏற்றுமதியாளர்கள் சர்வதேச அளவில்  போட்டியிட உதவியாக இருக்கும். விளை பொருட்களை சுத்தப்படுத்துதல், தரம் பிரித்தல் தொடங்கி விவசாயத்துகான உள்கட்டமைப்பை மேம்படுத்த இருப்பது, வேளாண் துறை வளர்ச்சியை மேம்படுத்தும். மேலும், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை ஏற்றுமதி செய்யும் விவசாயிகளுக்கு இது உதவியாக அமையும்." என்றார். 
 
 ஃபியோ தென் மண்டல தலைவர் டாக்டர்.ஏ. சக்திவேல் மேலும் கூறும் போது, ''சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) வரியை குறைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த எம்எஸ்எம்இ துறை இந்தியாவின் ஏற்றுமதியில் 45% பங்களைப்பை கொண்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, இந்தத் துறை மூலம் ஏற்றுமதி அதிகரிக்க உதவியாக இருக்கும். மத்திய பொது பட்ஜெட் உடன் ரயில்வே பட்ஜெட்  இணைக்கப்பட்டிருப்பது மூலம், அரசு பல்வேறு போக்குவரத்து வசதிகளில் கூடுதல் கவனம் மற்றும் மேம்பாட்டை மேற்கொள்ள உதவும். மேலும், சரக்கு போக்குவரத்துக்கு எடுத்துக் கொள்ளும் காலம் குறையும் என்பதோடு இதில் பங்கேற்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இது ஒரு புரட்சியாக அமையும். இந்த அனைத்து நடவடிக்கைகளும் ஏற்றுமதி துறையின் செலவை குறைப்பதோடு, இதர
நாடுகளுடன்  இந்திய ஏற்றுமதியாளர்கள் சுலபமாக
போட்டி போட உதவி செய்யும்" என்றார்.  
"இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி அளிப்பதற்கான (Pradhan Mantri Kaushal Kendra) திட்டத்தை மேலும் 600 மாவட்டங்களுக்கு நீடிப்பது மூலம், திறமையான பணியாளர்கள் கிடைக்காமல் அவதிப்படும் தொழில்துறையினர் பயன் அடைவார்கள்." என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
அதேநேரத்தில், டாக்டர்.ஏ. சக்திவேல், 'முந்தைய பட்ஜெட்டில் குறிப்பிட்டது போது கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி அமைப்பில் பெரிய மாற்றம் மேற்கொள்ளவில்லை" என்பதை சுட்டிக் காட்டினார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close