Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எங்கே செல்கிறது சென்னை ரியல் எஸ்டேட்?

எங்கே செல்கிறது சென்னை ரியல் எஸ்டேட்?

கடந்த 2016 ம் ஆண்டு பல முக்கிய அறிவிப்புகளைக் கொண்ட ஆண்டாக இருந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் முதல் பணமதிப்பு நீக்கம் வரை பல தலைப்புச் செய்திகளை உருவாக்கிய நிகழ்வுகள் இந்திய ரியல் எஸ்டேட் முகத்தையே மாற்றக் கூடியதாக அமைந்தன. இந்த மாற்றங்களால் சங்கடங்களுக்குள்ளான சென்னை ரியல் எஸ்டேட்  தனது நற்பெயரை நிலை நிறுத்துவதற்கான போராட்டங்களில் தடைகளைக் கடந்து தன்னை மீட்டெடுத்து வந்துள்ளது.

சென்னையின் இந்த உணர்வுகளைத் தக்கவைத்துக் கொள்ளும் வண்ணம் ஜே.எல்.எல் (JLL) அமைப்புடன் இணைந்து கிரெடாய் (CREDAI) ~~முன்னேறும் சென்னை: ஒரு பரிமாணச் சந்தையில் வெற்றிகளை முன்னோக்கிச் செல்லுதல் என்ற தலைப்பில் ஒரு  நிகழ்வை ஏற்பாடு செய்தது.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் விக்ரம் கபூர், டாக்டர் ராஜேந்திரகுமார் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆகிய அதிகாரிகள், தொழிற்துறை முன்னோடிகளான  பிரேம் துணைத்தலைவர் (ஹெச்.சி.எல்),  வேலன் (நிர்வாக இயக்குனர், டிரில் (TRIL), சந்தானம் (நிர்வாக இயக்குனர் செயிண்ட் ~கோபைன்), தத்தா (நிதி கட்டுப்பாட்டாளர்-ஹோண்டாய்), ஸ்ரீராம் ஷேஷாத்ரி (மூத்த பங்காளர் பி.டபிள்யு.சி) புருஷோத்தமன் (மண்டல தலைமை - நாஸ்காம் (NASSCOM) ஆகியோர் இந்த விவாதங்களில் மூன்று அமர்வுகளில் பங்கேற்றார்கள்.

அடித்தள உற்பத்தி  மையம் மற்றும் தற்போதைய மூதலீட்டு  நிலை ஆகிய சென்னையின் ஒருங்கிணைந்த பலங்கள் குறித்த விவாதங்கள் முதல் அமர்வில் இடம்பெறுகின்றன.

உற்பத்தித் தளத்தில் ஆட்டோ மொபைல்,ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், ஒளி பொறியியல், தொலை தொடர்புத் தொழில்துறைகளில் அரசு 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது. வேர்ஹவுஸிங் துறையில் கிரேட் ஏ ஸ்பேஸ் சப்ளையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சாதகமான வளர்ச்சி நிலைகளின் விளைவாக தனியார் ஈக்குவிட்டி நிறுவனங்கள் மத்தியில் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் முதலீடு செய்ய சரியான சொத்துகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

நகர்ப்புற நகரமயத் திட்டங்களின் தேவையை அதிகரிப்பதில் ஐ.டி,  ஐ.டி.ஐ.எஸ் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து இரண்டாம் அமர்வில் விவாதிக்க்கப்பட்டது. இந்தியாவின் முக்கியமான ஐ.டி மையமாக சென்னை இருப்பதால் திறனும் ஆற்றலும் கொண்ட பணியாளர்களின் வருகையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. 2016ல் சென்னையில்  புதிய அலுவலக இடங்களில் 70% ஐடி நிறுவனங்கள் எடுத்துக்கொண்டன.  சென்னை 6 மில்லியன் சதுர அடி என்ற சாதனை அளவையும் எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 20% அதிகம் ஆகும். அலுவலக சந்தை நிலை சீராக அதிகரித்து வருவதால் புதிய குடியிருப்புகளுக்கான தேவையும் சாதகமான முறையில் அதிகரிக்கும். சென்னையில் அலுவலகச் சந்தை அடர்த்தி அதிகரித்து வரும் தென்சென்னை புறநகர் பகுதி இதன் தேவையை மேலும் அடர்த்தியாக்க உள்ளது.

குடியிருப்பு கட்டுமானத் தொழிலில வணிக உலகமாக மாறியுள்ள அஃபோர்டபிள் குடியிருப்பு வாய்ப்புகள் குறித்து மூன்றாவது அமர்வு விவாதித்தது. தொழில்துறை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில் நிதி உதவி வசதிகள் அபரிமிதமாக அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. பட்ஜெட் ஹவுஸிங் பிரிவில் மிகுந்த அனுபவம் கொண்ட சென்னை டெவலப்பர்கள் தற்போது அதிகரித்துவரும் சந்தை நிலையை முழுமையாகப் பயன்படுத்தும்வகையில் தனது முதலீடுகளை தொடர உள்ளார்கள்.

மத்திய அரசின் அண்மை பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவாக ஏராளமான ரொக்கப் பணம் வங்கிகளுக்கு வந்திருக்கிறது. இதனால் வணிக கட்டுமானம், உள்கட்டமைப்பு (infrastructure) மற்றும் வீடு வாங்குவோருக்கான நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்குத் தேவையான பணம் இவ்வங்கிகளால் எளிதில் பட்டுவாடா செய்யும் நிலை உருவாகியுள்ளது. சென்னை அதன் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் திறன் ஆகியவற்றால் இந்தப் பயன்களை முதன்மையாக அனுபவிக்கும் நகரமாக முன்னணி வகிக்கிறது.

ரியல் எஸ்டேட் சட்டம் (RERA), ஜிஎஸ்டி (GST), அந்நிய நேரடி முதலீடு (FDI) சீர்திருந்தம், பணமதிப்பு நீக்கம் ஆகிய  2016 பன்முக வளர்ச்சிகளின் பயனாக நாட்டின் பொருளாதார நிலை நிலைப்பட்டுள்ளதால் ரியல் எஸ்டேட் திட்டங்களில் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close