Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீண்ட கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பட்ஜெட்- கவின்கேர் ரங்கநாதன்

மத்திய பட்ஜெட் 2017-18 அனைத்து பிரிவினருக்குமான அனைத்து துறைகளுக்குமான பட்ஜெட்டாகவும் மாற்றத்துக்கான பட்ஜெட்டாகவும் இருக்கிறது என்று கவின்கேர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சி.கே.ரங்கநாதன் கூறியுள்ளார். இந்த பட்ஜெட்  குறித்து அவருடைய கருத்துகள் இங்கே.

"டிமானிட்டைசேஷன் நடவடிக்கை கறுப்புப் பண ஒழிப்பு என்ற முத்திரையுடன் வந்ததைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட் கறுப்புப் பணம் உருவாவதைத் தடுக்கும் பல்வேறு திட்டங்களுடன் வந்திருக்கிறது. உதாரணங்கள் ரூ. 3 லட்சத்துக்கு மேலான ரொக்கப் பரிவர்த்தனைக்குத் தடை, கார்ப்பரேட் நிறுவனங்களில் ரூ. 10 ஆயிரத்துக்கு அதிகமான ரொக்கப் பரிவர்த்தனைக்கு அனுமதி இல்லை, அரசியல் கட்சிகளின் நன்கொடையில் ரூ. 2 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கப் பரிவர்த்தனைக்கு தடை ஆகியவை. இந்த முன்னெடுப்புகளோடு சேர்த்து, ஜிஎஸ்டி அறிமுகம் மற்றும் டிஜிட்டலைசேஷனை மிகத் தீவிரமாக செயல்படுத்துவது என வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தொழில் நடைமுறைகளில் புதிய வழிகளை உருவாக்கும் வகையிலும் இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரியை 30 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாகக் குறைக்கப்படும் என்ற உத்தரவாதத்தை நிறைவேற்றாவிட்டாலும் கூட, கார்ப்பரேட் துறையின் பெரும்பான்மை பங்கைக் கொண்டிருக்கும் சிறு, குறு நிறுவனங்களின் வரியை 25 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறது. அதேபோல் சிறு தொழில் முனைவோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ. 2 கோடி வரை வருமானம் ஈட்டுபவர்களின் உத்தேச வரியை 8 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறது. இது 25 சதவிகித சலுகை.

தனிநபர்கள் என்ற அடிப்படையில் பார்க்கும் போது, டீமானிட்டைசேஷனின் போது நீண்ட வரிசையில் காத்திருந்த நடுத்தர குடும்பங்களுக்கு பலனாக ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்துக்கான வரி 5 சதவிகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த வரிச்சலுகையோடு வீட்டுக் கடனுக்கான வட்டியில் தரப்படும் மானியம் பில்ட் அப் ஏரியாவுக்கு பதிலாக கார்ப்பரேட் ஏரியாவை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவது வரவேற்க தக்கது. மேலும் அசையா சொத்துக்களுக்கான நீண்டகால மூலதன ஆதாய வரிக்கன மூன்று ஆண்டுகள் என்ற கால வரம்பை 2 ஆண்டுகளாக குறைத்துள்ளது பாசிட்டிவான நடவடிக்கை.

மேக்ரோ பொருளாதார அளவிலும் இந்த பட்ஜெட்டில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வருமான பற்றாக்குறையை 2016-17 நிதி ஆண்டில் 2.3 சதவிகிதமாக இருந்ததை 2017-18 நிதி ஆண்டில் 2.1 சதவிகிதமாகக் குறைக்க இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் நிதிப் பற்றாக்குறையை 3.2 சதவிகிதம் என்ற நிலையிலும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் பாதியாகக் குறைக்கவும் இலக்கு வைக்கப்பட்டிருப்பது, ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டோடு இணைத்தது, திட்டமிட்ட மற்றும் திட்டமிடப்படாத செலவுகளைக் கையாள்வது போன்றவை வருங்காலத்தில் ஆரோக்கியமான அதிகமான ஜிடிபி வளர்ச்சியை அடைய உதவியாக இருக்கும். 

முன்பே சொன்னது போல் இந்த பட்ஜெட் பல வழிகளில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு 24 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது அடுத்த 5 ஆண்டுகளில் விவசாய வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்தும். ஊரக வேலை வாய்ப்பு திட்டமான 100 நாள் வேலைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 45 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறைக்கான நிதி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரயில்வே மற்றும் சாலைகளுக்கும் நிதி வழக்கத்தை விட அதிகமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் வளர்ப்புக்காகவும், ஏழை மற்றும் நடுத்தர பெண்களின் மேம்பாட்டுக்காகவும் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக 35 சதவிகிதம் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் கிராமப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டப்பட இருக்கிறது. டிஜிட்டலைசேஷன் வளர்க்க பணப்பரிவர்த்தனையை டிஜிட்டலாக்கும் முயற்சி எடுக்கப்படுகிறது. இப்படி பெரும்பாலும் இந்த பட்ஜெட் அனைவருக்குமான பட்ஜெட்டாக இருக்கிறது" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close