Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிரெடாய் சென்னை ரியல் எஸ்டேட் கண்காட்சி : நடிகை தமன்னா தொடங்கி வைத்தார்...

கிரெடாய் சென்னை ரியல் எஸ்டேட் கண்காட்சி : நடிகை தமன்னா தொடங்கி வைத்தார்...
 
சென்னை  கிரெடாய் (இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு)  ரியல் எஸ்டேட் கண்காட்சியை (ஃபேர்ப்ரோ 2017) நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்கி வைத்திருக்கிறது. 
 
திரைப்பட நடிகை தமன்னா பாட்டியா,  தர்மேந்திரா பிரதாப் யாதவ், இஆப, மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முதன்மை பொது மேலாளர்   டீ. ரமேஷ் பாபு ஆகியோர் ரியல் எஸ்டேட் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். 2017, பிப்ரவரி 10ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிற ஃபேர்ப்ரோ 2017 கண்காட்சியானது 10வது ஆண்டாக  இந்த ஆண்டு நடைபெறுகிறது. 
 
ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.10 கோடி வரை பல்வேறு விலை மதிப்புள்ள 300 குடியிருப்புத் திட்டங்களை 75  டெவலப்பர்கள் 3 நாட்கள் நிகழ்வாக நடைபெறுகிற இந்தக் கண்காட்சியில்  காட்சிப்படுத்துகின்றனர்.  
 
 
கிரெடாய் - சென்னை அமைப்பின் தலைவர் சுரேஷ் கிருஷ்ணன் ஃபேர்ப்ரோ 2017 கண்காட்சி தொடக்க விழாவில் பேசும் போது, “இந்த ஆண்டு இக்கண்காட்சிக்கு அதிக எண்ணிக்கையில் மனை, வீடு தேடுபவர்கள்  ஆர்வத்தோடு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அத்துடன், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் மத்தியிலும் பெரிய அவில் எதிர்பார்ப்பும், உற்சாகமும் காணப்படுகிறது" என்று கூறினார். 
தொடக்கவிழா நிகழ்ச்சியில் பேசிய ஃபேர்புரோ நிகழ்வின் அமைப்பாளர். அனந்த், “குடியிருப்புகளை வாங்க விரும்புபவர்கள் மத்தியில் ஒரு நேர்மறையான உணர்வு இருப்பதை நாங்கள் காண்கிறோம். அத்துடன், வாடிக்கையாளர்களின் மாறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சென்னை மாநகரம் முழுவதிலும் வெவ்வேறு வகையிலான பல்வேறு திட்டங்களை ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் உருவாக்கி இக்கண்காட்சியில் இடம்பெற செய்திருக்கிறார்கள்." என்றார். 
 
 
ஃபேர்புரோ 2017 நிகழ்வில் எஸ்பிஐ, பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ், எல்ஐசி பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி ஹோம் லோன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், இந்தியன் பேங்க் மற்றும் ஆதித்ய பிர்லா பைனான்ஸ் ஹோம் லோன்ஸ் போன்றவை கடன் உதவி அளிக்கின்றன.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close