Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதலீட்டு முடிவை எடுக்க வைத்த விழிப்பு உணர்வு கூட்டம்

 மியூச்சுவல் ஃபண்ட்

முதலீட்டு முடிவை எடுக்க வைத்த விழிப்பு உணர்வு கூட்டம்
 
 
- சி.சரவணன்
 
நாணயம் விகடன் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் இணைந்து சென்னையில் மியூச்சுவல் ஃபண்ட், 'செல்வம் சேர்க்கும் செயல்திட்டம்' என்கிற முதலீட்டாளர் விழிப்பு உணர்வு கூட்டத்தை நடத்தின. 
ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதியை மியூச்சுவல் ஃபண்ட் - சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) தினம் ஆக கடைபிடிக்கிறது. இதை ஒட்டி இந்தக் கூட்டத்தை நடத்தியது.
 
முதலில், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு சீனியர் ரீஜினல் ஹெட் அசோக் நஞ்சுண்டராஜ் பேசினார். அவர், முதலீடு செய்யும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களான,  முதலீட்டு மீதான பாதுகாப்பு, எளிதில் பணமாக்கும் வசதி, வருமான வரிச் சலுகை போன்றவை பற்றி விரிவாக விளக்கி சொன்னார். சம்பளம் அதிகரிக்கும் போது, நம்மவர்கள் செலவை அதிகரிக்கிறார்கள். இதற்கு பதில் சேமிப்பை அதிகரித்தால் எதிர்காலம் வளமாக இருக்கும் என்றார் அவர். 
 
அடுத்ததாக முதலீட்டு ஆலோசகர், ஏ.கே.நாராயண்,  முதலீட்டு முறையான எஸ்ஐபி பற்றி பேசினார். அவர் வேலைக்கு சேர்ந்த உடனேயே மாதம் ரூ.5,00, ரூ. 1,000 என முதலீட்டை எஸ்ஐபி முறையில் ஈக்விட்டி ஃபண்ட்களில் ஆரம்பித்துவிட வேண்டும். அப்படி செய்யும் போது, சந்தையின் ஏற்ற, இறக்கம் பற்றி கவலைக் கொள்ள தேவையில்லை என்றார். 
 
அவரே தொடர்ந்து, “வெளிநாட்டு பென்ஷன் ஃபண்டுகள் எல்லாம் நம்முடைய பங்குச் சந்தையில் பணத்தை முதலீடுசெய்து நல்ல லாபத்தை எடுத்துச் செல்கின்றன. ஆனால், நமது பென்ஷன் ஃபண்டிலிருந்து 5% பணத்தைப் போட்டாலே, நாம் அலறுகிறோம். வெளிநாட்டுக்காரர் நம் சந்தையிலிருந்து லாபத்தை எடுத்துக்கொண்டு செல்லும்போது, நாம் சும்மா இருப்பது சரியல்ல” என அவர் பேசியது, முதலீட்டாளர்களிடம் புதிய சிந்தனையை ஏற்படுத்தியது
 
 
சிறப்புரையாற்றிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன், ''உலகம் முழுக்க, இந்தியா பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது நாம் மண்ணையும் பொன்னையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நிலைமை முன்னைக்கு இப்போது பரவாயில்லை. நிலையான வருமானம் கிடைக்கும் திட்டங்களில் முதலீடு செய்யவே நம்மவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதில், குறைவான வருமானவே கிடைக்கும் என்பதை அவற்றை தவிர்ப்பது நல்லது. ரிஸ்க் உள்ள திட்டங்களில் நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்படுவதோடு, அதிக வருமானம் கிடைக்கிறது. அதில் ஒன்றுதான் ஈக்விட்டி ஃபண்ட்" என்றார்.  
 
இறுதியில் கேள்வி - பதில் பகுதி நடந்தேறியது. ஏராளமான முதலீட்டாளர்கள் அவர்களின் முதலீட்டு சந்தேகங்களுக்கு நிபுணர்களிடம் விளக்கம் கேட்டு தெளிவு பெற்றனர்.
 
 
வாசகர் ஒருவர், இந்தக் கூட்டம் முடிந்ததும் நகை வாங்கச் செல்வதாக இருந்தேன்.  இந்தக் கூட்டம் மூலம்  முதலீடு பற்றிய விழிப்பு உணர்வு ஏற்பட்டத்தால், நகை வாங்குவதற்கு பதில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போகிறேன் என மைக் பிடித்து பேசிய போது, அரங்கத்திலிருந்த அனைவைரும் கைதட்டி பாராட்டினர்.
 
படங்கள்: ப.பிரியங்கா 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close