Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கத்தில் இந்திய பங்குச் சந்தை!

காலை 11.10 மணி நிலவரம்
 
நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி எந்த ஒரு ஏற்ற, இறக்கம் இல்லாமல் ஃபிளாட் ஆக நிறைவடைந்தது. அதேநேரத்தில், பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 10.25 லட்சம் விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது, பஞ்சாப் அரசு. சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் மொத்தமும் தள்ளுபடி செய்யப்படும் என பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இதன் எதிரொலியாக வங்கிப் பங்குகள் நேற்று சரிவடைந்து காணப்பட்டது. 
 
 
 
இந்த நிலையில் இன்று (21.6.17) காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மெட்டல், ஐடி, டெக்னாலஜி, ஆயில் மற்றும் எரிவாயு மற்றும் நுகர்வோர் சாதனங்கள், ஆட்டோ மற்றும் வங்கி சார்ந்த துறைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 38.65 புள்ளிகள் குறைந்து 9614.85 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 85.36 புள்ளிகள் குறைந்து 31212.17 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பாங்க் ஆஃப் பரோடா 169.45 
லார்சன் 1,762.00 
ஹெச்யூஎல் 1,098.80
ரிலையன்ஸ் 1,418.20 
ஐடியா செல்லுலர் 82.40
 
விலை குறைந்த பங்குகள்
 
ஓஎன்ஜிசி 165.20 
சிப்லா 537.25
போஷ் 24,293.00
ஹிண்டால்கோ 198.60
ஐசர் மோட்டார்ஸ் 27,480.00

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close