Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கச்சா எண்ணெய் சரிவால் எண்ணெய், எரிவாயு பங்குகள் விலை சரிந்தது!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்று (21.6.17) காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மெட்டல், ஐடி, டெக்னாலஜி, ஆயில் மற்றும் எரிவாயு மற்றும் நுகர்வோர் சாதனங்கள், ஆட்டோ மற்றும் வங்கி சார்ந்த துறைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின. 
 
 
இந்த நிலையில் வர்த்தகத்தின் இடையே ஆசிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வந்ததாலும், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்களை விற்பனை செய்த காரணத்தினாலும் சந்தை எந்த ஒரு ஏற்ற, இறக்கம் இல்லாமல் ஃபிளாட் ஆக முடிவடைந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்த காரணத்தினால் எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்த நிறுவன பங்குகளின் விலை 2.5 சதவிகிதத்துக்கும் மேல் சரிவடைந்து காணப்பட்டது. எனினும் ஜெட் எரிபொருளின் விலை சரிவால் ஸ்பைஸ்ஜெட், ஜெட் ஏர்வேஸ் போன்ற ஏர்லைன்ஸ் நிறுவன பங்குகள் விலை சரிவடைந்து காணப்பட்டது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 19.90 புள்ளிகள் குறைந்து 9633.60 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 13.89 புள்ளிகள் குறைந்து 31283.64 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹெச்யூஎல் 1,123.45 
கோடக் மஹிந்திரா 991.95 
மாருதி சுசூகி 7,268.20 
சன் பார்மா 528.00 
ஹெச்டிஎஃப்சி வங்கி 1,698.70
 
விலை குறைந்த பங்குகள்
 
ஹிண்டால்கோ 196.55 
ஓஎன்ஜிசி 164.80
டாடா மோட்டார்ஸ் 457.30
போஷ் 24,226.05 
கெயில் 368.25 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close