Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 31,500 புள்ளிகள் உயர்ந்தது

காலை 11.10 மணி நிலவரம்
 
நேற்றைய வர்த்தகத்தின் இடையே ஆசிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வந்ததாலும், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்களை விற்பனை செய்த காரணத்தினாலும் சந்தை எந்த ஒரு ஏற்ற, இறக்கம் இல்லாமல் ஃபிளாட் ஆக முடிவடைந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்த காரணத்தினால் எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்த நிறுவன பங்குகளின் விலை 2.5 சதவிகிதத்துக்கும் மேல் சரிவடைந்து காணப்பட்டது. எனினும் ஜெட் எரிபொருளின் விலை சரிவால் ஸ்பைஸ்ஜெட், ஜெட் ஏர்வேஸ் போன்ற ஏர்லைன்ஸ் நிறுவன பங்குகள் விலை சரிவடைந்து காணப்பட்டது. 
 
 
 
இந்த நிலையில் இன்று (22.6.17) காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து காணப்படுகிறது. மூலதனச் சந்தையை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வகையில் கவர்ச்சிகரமானதாக  மாற்றுவதற்கு செபி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரியாலடி, மெட்டல், பவர், ஆட்டோ துறை சார்ந்த பங்குகள் உயர்வடைந்து காணப்ப்ட்டது. எச்.டி.எஃப்.சி லிமிடெட், பவர் கிரிட், ஆசியன் பெயின்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ் டி.வி.ஆர், சன் பார்மா மற்றும் ஆக்சிஸ் பாங்க் போன்ற நிறுவன பங்குகள் விலை உயர்வடைந்து காணப்பட்டது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 57.90 புள்ளிகள் உயர்ந்து 9691.50 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 221.54 புள்ளிகள் உயர்ந்து 31505.18 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
இன்போசிஸ் 963.40 
அரபிந்தோ பார்ம் 668.10
சன் பார்மா 537.10 
எச்டிஎப்சி 1,654.20 
யெஸ் வங்கி 1,454.80
 
விலை குறைந்த பங்குகள்
 
கெயில் 360.40 
ஹெச்யூஎல் 1,102.95
லுபின் 1,075.90
பிபிசிஎல் 645.00 
ஓஎன்ஜிசி 162.50 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close