Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்ற, இறக்கம் இல்லாமல் நிறைவடைந்த நிஃப்டி!

 
மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்று (22.6.17) காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்தது. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து காணப்பட்டது. மூலதனச் சந்தையை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வகையில் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கு செபி நடவடிக்கையால் சந்தை அதிகரித்து காணப்பட்டது. ரியால்டி, மெட்டல், பவர், ஆட்டோ துறை சார்ந்த பங்குகள் உயர்வடைந்து காணப்ப்ட்டது. எச்.டி.எஃப்.சி லிமிடெட், பவர் கிரிட், ஆசியன் பெயின்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ் டி.வி.ஆர், சன் பார்மா மற்றும் ஆக்சிஸ் பாங்க் போன்ற நிறுவன பங்குகள் விலை உயர்வடைந்து காணப்பட்டது. 
 
 
இந்நிலையில் வர்த்தகத்தின் இடையே அதிகரித்து காணப்பட்ட சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இறுதியில் எந்த ஒரு ஏற்ற, இறக்கம் இல்லாமல் ஃபிளாட் ஆக நிறைவடைந்து காணப்பட்டது. இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 3.60 புள்ளிகள் குறைந்து 9630.00 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 7.10 புள்ளிகள் உயர்ந்து 31290.74 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
சன் பார்மா 538.70
அம்பூஜா சிமெண்ட்ஸ் 244.95 
அரபிந்தோ பார்ம் 665.95 
எச்டிஎப்சி 1,653.80 
யெஸ் வங்கி 1,452.00 
 
விலை குறைந்த பங்குகள்
 
ஓஎன்ஜிசி 160.45 
ஹெச்யூஎல் 1,094.05 
லுபின் 1,066.95 
ஹிண்டால்கோ 191,60
கெயில் 360,10 -8,15 -2,21
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close