Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிஎஸ்டி அமல்... ஆட்டம் கண்ட பங்குச் சந்தை!

 
மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்று நள்ளிரவு முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வர உள்ளதால் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வந்தன. 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரம், 130 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் ஜிஎஸ்டி முக்கியமான வரி சீர்திருத்தமாக கருதப்படுகிறது. 
 
 
அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகள் இறக்கம் மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்த காரணத்தினால் சந்தை இறக்கத்தில் வர்த்தகமானது. ஜிஎஸ்டி இன்று நள்ளிரவு முதல் அமல் படுத்தப்படுவதால் ஆட்டோமொபைல் துறைகள் அதிக இறக்கம் கண்டன். எனினும் வர்த்தகத்தின் இறுதியில் இந்திய சந்தை பாசிட்டிவ் ஆக முடிவடைந்தது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 16.80 புள்ளிகள் உயர்ந்து 9520.90 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 64.09 புள்ளிகள் உயர்ந்து 30921.61 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
பாங்க் ஆஃப் பரோடா 161.90 
ஐடிசி 323.00
சன் பார்மா 556.00 
சிப்லா 557.60
பிபிசிஎல் 640.30 
 
விலை குறைந்த பங்குகள்
 
டாடா மோட்டார்ஸ் (டி) 264.00 
டெக் மஹிந்த்ரா 383.00 
டாடா பவர் 80.55 
ஐசர் மோட்டார்ஸ் 27,010.00 
எச்டிஎப்சி 1,613.00

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close