நிஃப்டி முதல் முறையாக 9,800 புள்ளிகள்!
மாலை 3.30 மணி நிலவரம்
இன்று (11.7.17) காலை நேர வர்த்தகத்தில் இரண்டாவது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகம் ஆனது. சர்வதேச சந்தைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து நிஃப்டி 9,800 புள்ளிகளை முதல் முறையாக எட்டிப் பிடித்தது. உள்நாட்டு சந்தைகள் ஆசிய சந்தைகள் அதிகரித்ததையடுத்து அதிகரித்து காணப்பட்டது. ஜெர்மனி பொருளாதாரம் குறித்த டேட்டா மற்றும் யு.எஸ். டெக்னாலஜி ஸ்டாக்குளில் புதுப்பிக்கப்பட்ட வட்டி காரணமாக சர்வதேச சந்தை அதிகரித்து காணப்பட்டது.

இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 15.00 புள்ளிகள் உயர்ந்து 9786.05 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 31.45 புள்ளிகள் உயர்ந்து 31747.09 என்ற நிலையில் வர்த்தகமானது.
விலை அதிகரித்த பங்குகள்
ஹிண்டால்கோ 200.65 4.85 2.48
பஜாஜ் ஆட்டோ 2,792.75 62.10 2.27
டாடா மோட்டார்ஸ் 456.95 10.00 2.24
பிபிசிஎல் 678.30 13.65 2.05
என்.டி.பி.சி 163.30 3.25 2.03
விலை குறைந்த பங்குகள்
ஐடியா செல்லுலர் 84.30 -2.90 -3.33
பார்தி ஏர்டெல் 395.45 -10.25 -2.53
பாங்க் ஆஃப் பரோடா 162.65 -3.95 -2.37
சிப்லா 538,45 -10,75 -1,96
விப்ரோ 263,20 -5,05 -1,88