Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லாயல் டெக்ஸ்டைல்ஸ் மாணிக்கம் ராமஸ்வாமி காலமானார்!

லாயல் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மாணிக்கம் ராமஸ்வாமி நேற்று நள்ளிரவு காலமானார்.
 
63 வயதான மாணிக்கம் ராமஸ்வாமி,  பெரும் தொழிலதிபரான தியாகராஜ செட்டியாரின் வழித்தோன்றலான மாணிக்கம் ராமஸ்வாமி,  சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தவர். கல்லூரியில் மிக நன்றாகப் படித்ததனால், பான்கோ பவுண்டேஷனில் கோல்ட் மெடல் விருது அவருக்குக் கிடைத்தது. 
 
1975-ல் தனது குடும்ப நிறுவனமான லாயல் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றார். வெறும் 2.5 கோடி ரூபாயாக  இருந்த இந்த நிறுவனத்தின் வருமானத்தை  200 கோடி ரூபாயாக உயர்த்தினார் அவர்.  இன்றைக்கு அந்த நிறுவனத்தின் விற்று வரவு ரூ.1,500 கோடி ஆகும். லாயல் டெக்ஸ்டைல் நிறுவனத்துக்குச் சொந்தமான மில்கள் தமிழகத்திலும், ஆந்திராவிலும் உள்ளன. 
 
175 ஆண்டு பழமையான பி.ஓஆர்ஆர் அண்ட் குரூப் நிறுவனத்தை வாங்கி, தனது நிறுவனத்துடன் இணைத்துக் கொண்டவர். 
 
கல்வித் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார் மாணிக்கம் ராமஸ்வாமி. மதுரையில் உள்ள தியாகராஜர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டை அவர் திறம்பட நடத்தி வந்தார். மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மதுரை தியாகராஜர் மாடல் ஸ்கூலை மிக நல்ல முறையில் நடத்தி வந்தார். 
 
ஜவுளித் தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்னைகள் பற்றி அவர் தொடர்ந்து சிந்தித்தும், பேசியும், எழுதியும் வந்தார். ஜவுளித் தொழிலுக்கான அமைப்பான டெக்ஸ்புரோசில் (TEXPROCIL) என்கிற அமைப்புக்குத் துணைத் தலைவராக இருந்துள்ளார். தென் இந்திய மில் அசோசியேஷன் அமைப்பின் தலைவராகவும் இருந்திருக்கிறார். சி.ஐ.ஐ. அமைப்பின் தமிழ்நாடு பிரிவின் தலைவராகவும் ஓராண்டு காலம் பணியாற்றியிருக்கிறார் மாணிக்கம் ராமஸ்வாமி.
 
தொழில் துறை வட்டாரத்தில் பலரும் வியந்து நோக்கும் நேர்மையாளராக இருந்தார் அவர். அரசை, மக்களை, தொழிலாளர்களை ஏமாற்றாமல் தொழில் நடத்துவதில் இம்மி அளவுகூட சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி வந்ததுடன், அதற்கொரு உதாரணமாகவும் அவர் இருந்துவந்தார். 
 
மாணிக்கம் ராமஸ்வாமியின் மனைவி வள்ளி மாணிக்கம் ராமஸ்வாமி ஆவார். அவருடைய ஒரே மகள் விசாலா ராமஸ்வாமி ஆவார். 
 
நேர்மையும், சமூக அக்கறையும் கொண்ட ஒரு தொழிலதிபரைத் தமிழகம் இழந்து தவிக்கிறது!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close