Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மியூச்சுவல் ஃபண்ட் - அதிகபட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

மியூச்சுவல் ஃபண்ட்  - அதிகபட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

சேனா சரவணன்

நாணயம் விகடன் மற்றும்  ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து 'மியூச்சுவல் ஃபண்ட் -  செல்வத்தைப் பெருக்கும் முதலீடு' என்கிற தலைப்பில்  கரூர் நகரில்  விழிப்பு உணர்வு கூட்டத்தை நடத்தின.

முதலில் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி, ''ஆண்டுதோறும் செலவு எவ்வளவு அதிகரிக்கும் என்பதை கணக்கிட்டு முதலீடு செய்ய வேண்டும். இன்றைய 2,000 ரூபாயின் மதிப்பு, ஆண்டு பண வீக்கம் 6.5% என்றால், 30 ஆண்டுகள் கழித்து அதன் மதிப்பு 302 ரூபாயாக குறைந்துவிடும். எனவே, விலைவாசி உயர்வை தாண்டி வருமானம் தருவதாக உங்கள் முதலீடு இருக்க வேண்டும். உங்கள் பணம் சும்மா கிடக்க கூடாது. உங்களுக்காக உழைக்க வேண்டும். அதற்கு சரியான முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்வது அவசியம்" என்றார். .

அடுத்து பேசிய ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின்  முதலீட்டாளர்  கல்வி உதவி துணைத் தலைவர் எஸ். குருராஜ்," குறுகிய காலம், நடுத்தர காலம், நீண்ட காலம் என நமக்கு  பணம் தேவைப்படும். இந்த இலக்குகள் சரியாக நிறைவேறுவது சரியான முதலீட்டு திட்டங்களின் தேர்வில்தான் இருக்கிறது." என்றார். லிக்விட் ஃபண்டில் அரை மணி நேரத்தில் ரூ. 2 லட்சம் வரை ஆன்லைன் மூலம் பணம் எடுக்கும் புதிய வசதி பற்றி அவர் விளக்கினார்.  
 

சிறப்புரையாற்றிய முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ' மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் இருக்கும் ரிஸ்க்கள் பற்றியும் அவற்றை தவிர்ப்பதற்கான வழிகள் பற்றியும் விளக்கமாக சொன்னார். எக்ஸ்பென்சிங் விகிதம் குறைவாக இருக்கிறது என்பதற்காக மட்டும் ஒரு ஃபண்டை தேர்வு செய்யக் கூடாது. இந்தச் செலவு விகிதம் சிறிது கூடுதலாக இருந்தாலும் தொடர்ந்து நல்ல வருமானம் தருகிறது என்றால் அந்த ஃபண்டை முதலீட்டுக்கு தேர்வு செய்யலாம். செலவு என்பது வருமானத்தில் ஈடுகட்டப்படுவதோடு, கூடுதல் வருமானமும் கிடைக்கும்." என்றார்.  
 

கூட்டத்துக்கு தம்பதிகளாக வந்தவர்கள் பாராட்டப்பட்டனர்.

இறுதியாக முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளித்தனர். ஒரு வாசகர், ''மியூச்சுவல் ஃபண்டில் அதிகபட்சம் எவ்வளவு முதலீட்டு செய்யலாம்" என்று கேட்டார். அதற்கு வ. நாகப்பன் , ''வரம்பு எதுவும் இல்லை. வருமான வரிச் சலுகை வேண்டும் என்கிறவர்கள் இஎல்எஸ் எஸ் ஃபண்டை தேர்வு செய்யலாம். இதில், நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ. 1.5 லட்ச முதலீட்டுக்கு வரிச் சலுகை கிடைக்கும்" என்று பதில் அளித்தார்.
 

படங்கள் : நா.ராஜமுருகன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close