Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அஸெட் மேனேஜ்மென்ட் பங்கு விலை முதல் நாளில் 18% அதிகரிப்பு..!

  ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அஸெட் மேனேஜ்மென்ட்  பங்கு விலை முதல் நாளில் 18% அதிகரிப்பு..!

சேனா சரவணன்

அனில் அம்பானிக்குச் சொந்தமான  ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம்,  ஐபிஓ மூலம் சுமார் ரூ. 1,500 கோடி நிதித் திரட்டு உள்ளது.
 
இதன் ஐபிஓ 2017 அக்டோபர் 25ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைந்தது.  பங்குகள் ரூ. 247-252 என்ற விலைப்பட்டையில் விற்கப்பட்டன. 
 
இந்த ஐபிஓவில் புதிதாக 2.44 கோடி பங்குகளும், பங்குதாரர்கள் வசமுள்ள பங்குகளில் 3.67 கோடி பங்குகளும் விற்கப்பட்டன.  முதன்முதலாக ஐபிஓ வெளியிடும்  மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனம் இதுதான். 
இதன் பங்குகள் வேண்டி 81.5 மடங்கு விண்ணப்பிட்டதால், அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிறுவனப் பங்குகள் இன்று (நவம்பர் 6) பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. ரூ.252-க்கு வெளியிடப்பட்ட இதன் பங்குகள் 18% அதிகமாக ரூ. 297.55-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. வர்த்தகத்தின் இடையே ரூ.299 வரை அதிகரித்தது. 
 
இந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் கேபிட்டல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த நிப்பான் லைஃப் நிறுவனமும் இணைந்து நிர்வகித்து வருகின்றன. இந்த நிறுவனம் ரூ. 3.8 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது.
 
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close