Published:Updated:

`இனி எங்களுக்குச் சமமான வாய்ப்புகள் கிடைக்கும்!' - மீண்டும் விவாத நிகழ்ச்சிகளில் தமிழக பா.ஜ.க

"எங்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் இனி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள்" எனப் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கடந்த ஜூலை 2-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தமிழிசை
தமிழிசை ( விகடன் )

"எங்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் இனி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள்" எனப் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கடந்த ஜூலை 2-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தமிழிசை
தமிழிசை
விகடன்

"சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும் சமவாய்ப்பும் இல்லாததால் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று அதற்குக் காரணம் கூறியிருந்தார்.

அதன்படி, இப்போதுவரை பா.ஜ.க-வைச் சார்ந்த எவரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கவில்லை. இத்தகைய சூழலில் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை நேற்று ஓர் அறிக்கைவிட்டார். அதில், 'பா.ஜ.க-வினர் மீண்டும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழக பாஜக
தமிழக பாஜக
the hindu

மீண்டும் பா.ஜ.க-வினர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்துப் பேசிய தமிழிசை, "ஊடகங்களுடன் எப்போதும் நல்ல நட்பு இருக்க வேண்டுமென்றேதான் விரும்புகிறோம். அது தொடரும் விதமாக, எங்கள் பா.ஜ.க ஊடகக் குழுவினரைச் சார்ந்தவர்கள் தமிழ் ஊடகங்களில் உள்ள முக்கியப் பிரதிநிதிகளைச் சந்தித்தார்கள். இனி, ஊடகங்கள் பா.ஜ.க தரப்பினர் பேசுவதற்குச் சமமான வாய்ப்பு கொடுப்பதாகச் சொல்லியிருக்கின்றன. ஆகவே, எங்கள் கட்சியின் சார்பில் இனி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்" எனக் கூறியிருக்கிறார்.