Published:Updated:

`விரைவில் வெளியே வரப்போகிறேன்!' - சிறை சந்திப்பில் உற்சாகப்பட்ட சசிகலா

தினேஷ் ராமையா

`விரைவில் வெளியே வரப்போகிறேன்' என்று தம்மை சிறையில் சந்தித்தவர்களிடம் சசிகலா உற்சாகமாகப் பேசியிருக்கிறார்.

Sasikala
Sasikala
`இப்படியொரு சூழல் வந்துவிட்டதே' என அழுதார் சசிகலா! - சிறைக் காட்சிகளை விவரிக்கும் புகழேந்தி

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை நீதிமன்றம் விதித்த நான்காண்டுகள் சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்த நிலையில், இரண்டரை ஆண்டுகள் தண்டனையை சசிகலா உள்ளிட்டோர் நிறைவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில், நன்னடத்தை விதிகள் அடிப்படையில் விரைவில் வெளியே வந்துவிடுவேன் என்று நம்பிக்கையோடு பேசிவருகிறாராம் சசிகலா.

TTV Dinakaran
TTV Dinakaran
`டி.டி.வி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கட்டும்!' - விவேக் பேச்சால் உக்கிரத்தை வெளிப்படுத்திய சசிகலா

இந்த நிலையில், சசிகலாவை தினகரன் நேற்று பெங்களூரு பரப்பன அக்ராஹாரா சிறையில் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த சந்திப்பின்போது, டி.டி.வி. தினகரனுடன் பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர். அ.ம.மு.க -விலிருந்து தொடர்ச்சியாக நிர்வாகிகள் பலர் விலகி மற்ற கட்சிகளில் இணைந்துவருவது குறித்து தினகரனிடம் ஏற்கெனவே சசிகலா கவலை தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின. தினகரனின் செயல்பாடுகள் காரணமாகவே அவர்கள் விலகிச்செல்வதாகவும் சசிகலாவுக்கு புகார் சென்றிருக்கிறது.

அ.ம.மு.க. பட்டியல் வெளியீடு... சிறையில் சசியைச் சந்தித்தாரா, தினகரன்?

இதுகுறித்து சமீபத்தில் பேசிய தினகரன், ``அ.ம.மு.க-விலிருந்து சில பேர் வெளியே போகிறார்கள். அவர்கள் ஏன் வெளியே போகிறார்கள் என்பது மக்களுக்கே தெரியும். அதுபோல பல பேர் வந்து சேர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இப்போதைய நிலையில், அ.தி.மு.க ஒரு நெல்லிக்காய் மூட்டை மாதிரி. ஆட்சி, அதிகாரம் கையில் இருப்பதால் ஒன்றாக இருக்கிறது. ஆட்சி முடியட்டும், நெல்லிக்காய்கள் எப்படிச் சிதறுகின்றன என்று பாருங்கள். அ.தி.மு.க-வில் பல குழுக்கள் இருக்கின்றன'' என்று பேசியிருந்தார்.

TTV Dinakaran
TTV Dinakaran

நேற்றைய சிறை சந்திப்பில், சசிகலாவை தனிப்பட்ட முறையிலும் சில நிர்வாகிகள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய நிர்வாகிகள் சிலர், `` அ.ம.மு.க-வில் இருந்து நிர்வாகிகள் தொடர்ச்சியாக விலகிவருவது, தினகரனின் செயல்பாடுகள், அ.தி.மு.க விவகாரம் உள்ளிட்ட அரசியல்சூழல்கள்குறித்து சசிகலாவிடம் விளக்கினோம்.

நாங்கள் கூறியதை கவனமாகக் கேட்டுக்கொண்டார். `விரைவில் வெளியே வந்துவிடுவேன்' என்று உற்சாகத்துடன் பேசினார். `நீங்கள் வெளியே வந்தால், அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும்' என்று நாங்கள் கூறியதை ஆமோதித்த அவர், விடுதலைகுறித்து நம்பிக்கையுடன் பேசினார். சிறையில் இருந்து வெளியே வந்ததும் நல்ல மாற்றம் நடக்கும் என்றும் அவரிடம் நாங்கள் நம்பிக்கை தெரிவித்தோம். அதையும் புன்னகைத்தபடியே கேட்டுக்கொண்டார்.

Sasikala
Sasikala
ஜெ.வாக ரம்யா கிருஷ்ணன்; சசிகலா கதாபாத்திரம் இல்லாத ஜெ.வின் பயோபிக்!

`தினகரன் கன்ட்ரோல் இல்லாமல் செல்கிறார்' என்று நாங்கள் சொன்னதை கவனத்தோடு கேட்டுக்கொண்டார். சிறை சந்திப்புகள் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவது டி.டி.வி.தினகரனின் வழக்கம். ஆனால், இந்தமுறை அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. மதுரை செல்வதாகக் கூறி செய்தியாளர் சந்திப்பை அவர் தவிர்த்துவிட்டு சென்றுவிட்டார்'' என்றார்கள்.