Published:Updated:

`2 வேளை மட்டுமே உணவு; ஃபீஸ் கட்டக்கூட பணமில்லை!’ - காஷ்மீர் இளைஞர்களுக்கு டெல்லியில் நேர்ந்த சோகம்

பலமுறை தன் வீட்டுக்கு ஹூசைன் தொடர்பு கொண்டும், அவரால் சரிவர பேசமுடியவில்லை. இதனால், கல்லூரிக் கட்டணம் கட்டுவது, உணவு, அறைக்கான வாடகை உள்ளிட்டவற்றைக் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Students
Students ( AFP )

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தைச்சேர்ந்தவர் முக்குதாஸ் ஹூசைன் கலாஸ். 18 வயதான இவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த தகவல் தொடர்பு துண்டிப்பு காரணங்களால் உணவுக்கும் படிப்புக்கும் வீட்டிலிருந்து பணத்தைப் பெற முடியாமல் தவித்துள்ளார்.

jammu kashmir
jammu kashmir
காஷ்மீர் இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது; ஆனால், ஜம்மு எப்படியிருக்கிறது எனத் தெரியுமா?

``நான் தங்கியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளர் கருணையுள்ளம் கொண்டவர். ஆனால், அவரே என் நிலைமையைப் புரிந்துகொள்ளவில்லை. வாடகையைக் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டேன். தாவரவியல் படித்து வருகிறேன். செய்முறை விளக்கங்களுக்குத் தேவையான உபகரணங்களை பணம் இல்லாத காரணத்தால் என்னால் வாங்க முடியவில்லை. `பணம் வந்த பிறகு, செய்முறைகளை செய்துகொள்’ என்று பேராசிரியர் என்னிடம் கூறினார்” என்கிறார் ஹூசைன்.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின், ஒவ்வொரு கட்டங்களாக மொபைல் மற்றும் இணையதள தகவல் தொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

பூஞ்ச் மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. அப்பகுதியில் நெட்வொர்க் மிகுந்த மோசமான நிலையில் இருந்துள்ளது. பலமுறை தன் வீட்டுக்கு ஹூசைன் தொடர்பு கொண்டும், அவரால் சரிவர பேச முடியவில்லை. இதனால், கல்லூரிக் கட்டணம் கட்டுவது, உணவு, அறைக்கான வாடகை உள்ளிட்டவற்றைக் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ``இங்கு நிலைமை சீரானதும். உனக்குத் தேவையான பணத்தை அனுப்புகிறேன்’ என்று என்னுடைய தந்தை கூறி முடித்ததும் போன்கால் `கட்’ ஆகிவிட்டது.

jammu kashmir
jammu kashmir
file photo

நான் கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து பணம் வாங்கியிருந்தேன். கையில் காசு இல்லாத காரணத்தால், நான் தங்கியிருக்கும் அறைக்கு அருகிலிருந்த கடையில் நாளுக்கு இரண்டு வேளை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். அதுவும் கடன் அடிப்படையில்” என்கிறார் ஹூசைன்.

அதேபோல 17 வயதான அயாஸ் உல் ஹக், டெல்லியில் இந்தி இலக்கியம் படித்து வருகிறார். அவர் கூறுகையில், ``ஜம்மு-காஷ்மீரில் தொடக்கத்தில் முழு தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது குறித்து அறிந்தபோது, நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்” என்றார். நண்பர்களிடம் கடன் வாங்கித்தான் தன்னுடைய வீட்டு வாடகையை இவர் செலுத்தி வருகிறார்.