Published:Updated:

பெண்களிடம் பேசக் கூச்சமாக இருக்கிறது, தீர்வு சொல்லுங்களேன்! #LetsSpeakRelationship

'Fake it till you make it' என்கிற அடிப்படையில் நம்மைத் தன்னம்பிக்கை மிக்கவராகக் காட்டிக்கொண்டு பேசிப் பழக வேண்டும்.

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship

நான் இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்டவன். நிறைய பெண்கள் வலிய வந்து என்னிடம் நட்பாகப் பேசுகிறார்கள். ஆனால், அவர்களிடம் எப்படிப் பழகுவது என்று தெரியவில்லை. இதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்? - மதிராஜா

கூச்ச சுபாவம் பெரும்பாலும் பல்வேறுபட்ட காரணங்களால் வரும். சிலருக்குத் தன்னம்பிக்கைக் குறைபாடு இருக்கும். அதனால் பேசத் தயங்குவார்கள். ஆண்கள் பெண்கள் யாரிடம் பேசவும் இந்தவகையினர் தயங்குவார்கள். இதில் இரண்டாம் வகை இருக்கிறது. இவர்களது கூச்ச சுபாவத்துக்கு அவர்களது குடும்ப அமைப்பு முறை காரணமாக இருக்கும். ஆண் பிள்ளையாக இருந்தால் பெண் பிள்ளைகளிடம் பேசுவது தவறு என்று கூறி வளர்த்திருப்பார்கள். அதுவே, பெண்பிள்ளையாக இருந்தால் பிற ஆண்களிடம் பேசுவது தவறு என்று கூறி வளர்த்திருப்பார்கள்.

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship

அதனால் இயல்பாகவே எதிர்பாலினத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களிடம் பேச வந்தால் தயங்கி ஒதுங்கிக்கொள்வார்கள். எதிரில் இருப்பவரும் நார்மலான சக மனிதர்தான் என்கிற நினைப்பு முதலில் ஏற்பட வேண்டும். அவர் ஆண்/பெண் அதனால் அவரிடம் பேசக் கூடாது என்கிற அடிப்படை எண்ணம் மாற வேண்டும்.

'எதிரில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ' என்று நினைத்துக்கொண்டு தன்னம்பிக்கைச் சிக்கலால் பேசாமல் இருப்பதைவிட 'Fake it till you make it' என்கிற அடிப்படையில் நம்மைத் தன்னம்பிக்கை மிக்கவராகக் காட்டிக்கொண்டு பேசிப் பழக வேண்டும். கால ஓட்டத்தில் நம்மையும் அறியாமல் நம்மிடம் தன்னம்பிக்கையும் பாசிட்டிவ் எனர்ஜியும் தொற்றிக் கொண்டிருக்கும்.

- சித்ரா, மனநல ஆலோசகர்

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship