சந்தோஷம் தருவார் சனி பகவான்!


வணங்குவோம்
சந்தோஷம் தருவார் சனி பகவான்!
னியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை' என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால், நம்மில் பலரும் சனி பகவான் என்றாலே பயந்து நடுங்குகிறோம். இது தவறு!

தீர்க்காயுளைத் தனது பொறுப்பில் வைத்திருப்பதால் 'ஆயுள்காரகன்' எனப் போற்றப்படும் சனிபகவான்...கருணை வள்ளல்! முன்ஜன்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களைத் தந்து, நம் பாவச் சுமையைக் களையும் கிரக மூர்த்தி இவர். சூரியபகவானுக்கும் சாயாதேவிக்கும் மைந்தனான இவர், தொட்டில் குழந்தையாக இருந்தபோதே இருகரம் கூப்பி சிவபெருமானை வணங்கியவர் என்ற பெருமை கொண்டவர்.

வானியல்படி, சூரியனிடமிருந்து அதிக தூரத்தில் உள்ள பாதையில் சுற்றி வரும் சனி, மற்ற கிரகங்களைவிட மிக மெதுவாகச் சுழல்கிறார். இவர், ஒரு ராசியைக் கடக்க சுமார் இரண்டரை ஆண்டு காலம் ஆகும்; ராசி மண்டலத்தைக் கடக்க சுமார் 30 ஆண்டுகள் பிடிக்கும். எனவே இவரை, 'மந்தன்' என்பார்கள். காரி, முடவன், காகம் ஆகிய பட்டப் பெயர்களும் இவருக்கு உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick