ஸ்ரீரமண மகரிஷி


கவான் ஸ்ரீரமணரிடம்  போனால், அமைதியாக இருக்கிறது. ஏதோ ஒரு நிம்மதி ஏற்படுகிறது. மலையைவிட்டுக் கீழே இறங்கினால், பிரச்னைகள் வந்து விடுகின்றன. நோய் ஆட்டம் போடுகிறது. ஆனால், அந்த இடத்தில் எதுவுமே இல்லையே, ஏன் அப்படி? பசி கூட எடுக்கவில்லையே, ஏன் அப்படி? ஆச்சரியமாக இருக்கும். அந்த மகான் மீது ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படும். தேடுதலின் விளைவாக காதல் அல்லது அன்பு; அதன் பின்விளைவாக நம்பிக்கை; மகான்களின் மீது நம்பிக்கை ஏற்பட, அவர்களின் உபதேசம் உள்ளுக்குள் மெள்ள மெள்ள இறங்கும். அவர் அண்மையில் இருந்தது, அவரின் அதிர்வைப் பெற்றது, அவர் தொடலில் ஆனந்தம் கண்டது, அவர் பார்வையில் உள்ளுக்குள் திரும்பியது என்றெல்லாம் நடக்க, மனம் உள்நோக்கி நிற்க, ஓர் அமைதி ஏற்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!