பனிமுடி தரிசனம்

நீண்ட தொலைவு பயணத்துக்குப் பிறகு மானசரோவர் நதிக்கரையில் கிடைத்த கயிலைமலையானின் தென்முக தரிசனம் நமக்கு உற்சாகம் தருகிறது. மானசரோவரை வாகனத்தில் வலம் வருகையில், இடதுபுறமாக அமைந்துள்ள ஓர் ஏரி நம்மை கொஞ்சம் பயம்கொள்ளச் செய்கிறது. 'ராட்சஸ்தல் ஏரி’ என்று அழைக்கப்படும் இந்த ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 15,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ராட்சஸன் ராவணன், கயிலாய மலையை அசைத்துப் பார்த்த இடம் இது என்கிறார்கள்.

 

ராட்சஸனின் காலடி பட்டதாலோ என்னவோ, இந்த ஏரியின் நீர் சற்றுக் கருமையான நிறத்தில் இருக்கிறது. இந்த ஏரியை எட்டிப் பார்க்கும்போதே ஒருவித பயமும் எட்டிப் பார்ப்பதால், யாரும் இந்த நீரில் காலடிகூட எடுத்து வைப்பதில்லை.

click

ராட்சஸ்தல் ஏரியில் இருந்து தொடர்ந்து பயணித்தால், கடல் மட்டத்தில் இருந்து 15,500 அடி உயரத்தில் உள்ள தார்ச்சன் என்கிற சிறு நகரை சென்றடையலாம். தார்ச்சன் என்றால் 'நமஸ்காரம்’ என்று விளக்கம் தருகிறார்கள் திபெத்தியர். இங்கே, கயிலாய மலையின் நேத்ர தரிசனம் (நெற்றிக்கண் தரிசனம்) நமக்குக் கிடைக்கிறது. அந்தப் பரவசத்துடன், இந்த நகரில் உள்ள விடுதியில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் உற்சாகமாக யாத்திரை புறப்படலாம்.

(ஆன்மிக ஆல்பம் புரட்டுவோம்...)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick