கங்கையின் புனிதம் காப்பது யார்? | puranam | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2013)

கங்கையின் புனிதம் காப்பது யார்?

ங்கை புனிதமான நதி என்பது நம் எல்லோருக்கும் தெரியும். கங்கை ஒரு நதி மட்டுமல்ல; அது, நம் வாழ்க்கையின் ஓர் அங்கம். விஷ்ணு பாதத்தில், கங்கோத்ரியில் உற்பத்தியாகி, பனி சூழ்ந்த இமயமலையில் தொடங்கி, வங்கக்கடலில் வந்து சேர்கிறாள் கங்கை. இந்தப் புனித நதி மட்டும் ஓடாவிட்டால், வட இந்தியா இன்னொரு பாலைவனமாகத்தான் இருந்திருக்கும். கங்கை பாய்ந்தோடும் முக்கிய க்ஷேத்திரங்களான தேவபிரயாக், ருத்ர பிரயாக், ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, கங்காசாகர் ஆகிய இடங்களில் கங்கையை தரிசித்துப் பூஜித்து, கங்கையில் குளித்தால் ஒருவன் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, அவன் புண்ணியவானாகிறான் என்பது இந்துக்களின் நம்பிக்கை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க