யாக்ஞவல்கியர் | yakgavalkiyar | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2013)

யாக்ஞவல்கியர்

'பல காலமாகத் தம் அறையிலேயே உணவருந்தி வந்த சுவாமிஜி, அன்று குருபாயிக்களுடனும் மற்ற சீடர்களுடனும் சேர்ந்து உணவருந்தினார். அதன்பின், தமது சீடர்களுடன் சற்றே உரையாடிவிட்டு, மடத்து நூல் நிலையத்திலிருந்து கொண்டு வந்திருந்த சுக்ல யஜுர் வேதத்தின் ஒரு பகுதியைப் படிக்கும்படி கூறினார். இடையிடையே சில பகுதிகளுக்கு விளக்கங்கள் அளித்தார். பிற்பகல் 1 மணி அளவில் எல்லா பிரம்மசாரிகளுக்கும் வடமொழி இலக்கண வகுப்பு எடுத்தார். மடத்தில் வேதங்களைப் படிப்பதற்காக ஒரு கல்லூரி தொடங்கவேண்டும் என்ற தமது விருப்பத்தைக் கூறினார். மாலையில் இரண்டு மணி நேரம் நடைப்பயிற்சி! இரவு பூஜை முடிந்தவுடன், தமது அறையில் ஒரு மணி நேரம் தியானம்! பின்னர், தரையில் விரித்திருந்த படுக்கையில் கால்களை நீட்டிப் படுத்தார். அவரது கைகள் நடுங்குவதை அருகிலிருந்த சீடர்கள் கண்டனர். பின்னர், இருமுறை ஆழ்ந்த பெருமூச்சு விட்டார். அதுவே சுவாமிஜிக்கு  நிறைவாயிற்று!’ 

நீங்க எப்படி பீல் பண்றீங்க