திருமாங்கல்யம் அருளும் திருக்கல்யாண உத்ஸவம்!

திருக்கல்யாணத் திருத்தலங்கள்!

ன்றைக்கும் அந்தப் பசு பால் கறக்கவில்லை. மடி வற்றிக் கிடந்தது கண்டு அதன் எஜமானனுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. கோபத்தில், அருகில் இருந்த ஒரு கழியை எடுத்துப் பசுவின் மடியிலேயே அடித்தான். வலி பொறுக்காத பசு ஓடத் துவங்கியது. ஓரிடத்தில் அதன் கால் குளம்பு எதன் மீதோ பட்டு இடற,  அங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது. பசு ஒரு முனிவராக உருமாறி நின்றது.

ஆமாம்! பசுவின் கால் குளம்பை இடறச் செய்தது ஒரு சிறிய சிவலிங்கம்தான். இருகரம் கூப்பி அந்தச் சிவ லிங்கத்தை வணங்கி நின்றார் அந்த மகரிஷி. முன்னொரு காலத்தில் சிவபூஜை செய்துகொண்டிருந்த கபில முனிவர், தன்னையும் அறியாமல் ஏதோ யோசனையில் இடக்கையால் ஈஸ்வரனுக்கு தீபாராதனை செய்துவிட, சிவநிந்தை செய்த தோஷத்துக்கு ஆளானார். அதன் விளைவாக, பசுவாகப் பிறப்பெடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்