குற்றங்களைத் தடுப்பார் கணவாய் தர்மசாஸ்தா!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் இருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது கணவாய் ஸ்ரீதர்மசாஸ்தா கோயில். இவரை, தேனி மாவட்டத்தின் எல்லைத் தெய்வம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஒருகாலத்தில், கொலை வழக்கு ஒன்றில் அண்ணன் - தம்பி இருவரும் சிக்கிக்கொள்ள, ஊர் மக்களால் மிகுந்த துன்பத்துக்கு ஆளானார்கள். 'செய்யாத குற்றத்துக்கு இப்படி தண்டனை அனுபவிக்க வேண்டுமா’ என்று நொந்து போனவர்கள், கணவாய்ப் பகுதி வழியே மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். இதை அறிந்த அவர்களின் தங்கை, தன் சகோதரர்களைக் காணும் பொருட்டு, தானும் அந்த வழியே பயணப்பட்டாள். வழியில் ஊர்மக்கள் அவளைப் பார்த்து, ஆவேசமானார்கள். அவளுக்குத் திருட்டுப் பட்டம் கட்டி, அடித்து உதைத்தார்கள். 'நான் எதுவும் திருடவில்லை. என்னைக் கொன்ற பாவம் உங்களைச் சும்மா விடாது’ என்று சபித்துவிட்டு இறந்தாள் அவள். பின்னர் தங்கள் தவற்றை உணர்ந்த ஊர்மக்கள், 'எங்களை மன்னித்துவிடம்மா! உன்னைக் கன்னி தெய்வமாக வழிபடுகிறோம். நீ இறந்த இடத்தில், காசுகளை வைத்து உன்னைச் சாந்தப்படுத்துகிறோம்’ என்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்