ஹலோ விகடன் - அருளோசை

கார்த்திகையில் ஐயப்ப ஸ்வாமிக்கு மாலையணிந்து விரதம் இருப்பதும், மகர ஜோதியன்று அவரைத் தரிசிப்பதும் ஐயப்பமார்களுக்கு பிறவிப்பயனை அடைந்த சந்தோஷத்தை அளிப்பவை. வழிபாடுகளாலும் விரதங்களாலும் ஒட்டுமொத்த வாழ்வையும் சீரமைக்கும் இந்த புண்ணிய காலத்தில், அடியவர்கள் ஸ்வாமி ஐயப்பனிடம் தங்களை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். ஐயனுக்கான அந்த அர்ப்பணிப்பு சத்தியம் நிறைந்ததாக, பக்தி  மிகுந்ததாக இருக்க வேண்டாமா?

அதற்கு அடியவர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? கலியுக வரதனாம் தர்மசாஸ்தாவின் கருணை மழையைப் பூரணமாகப் பெற்றுச் சிறப்பது எங்ஙனம்?

tel:+(91)-44-66802913 *

இந்த எண்ணுக்கு டயல் செய்யுங்களேன். 25.11.14 முதல் 1.12.14 வரை சிலிர்க்க வைக்கும் தகவல்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறார்... ஐயன் ஐயப்பன் அடியவர் அரவிந்த் சுப்பிரமணியம்.

றைவனை நாம் எப்படி, எவ்வளவு நேரம் வழிபடுகிறோம் என்பது முக்கியமில்லை. எந்த அளவு நம்பிக்கையோடு வணங்குகிறோம் என்பதுதான் முக்கியம். நம்பிக்கையோடு இறைவனை வணங்கும்போதுதான், நாம் நினைத்த காரியங்கள் நிச்சயமாக நிறைவேறும். ஒவ்வொருவரும் கோயிலுக்குச் செல்லத் தனித்தனிக் காரணங்கள் உள்ளன. எந்தச் சோகத்தை அல்லது எந்த வருத்தத்தை மனதில் சுமந்துகொண்டு நாம் கோயிலுக்குச் சென்றாலும், ஒரு தெளிவுடன்தான், மன அமைதியுடன்தான் வீடு திரும்புவோம்.

கடவுளிடம் எதற்காகவும் நாம் பயம் கொள்ள வேண்டியதே இல்லை. உள்ளத் தூய்மையோடு கடவுளை வழிபட வேண்டும். முழு மனதாய் இறைவனைத் துதித்தால், மனநிம்மதியும் வாழ்க்கை வளமும் பெற்றுச் சிறக்கலாம்.

tel:+(91)-44-66802913 *

இந்த எண்ணுக்கு டயல் செய்யுங்கள். 2.12.14 முதல் 8.12.14 வரை பக்தி மார்க்கம் குறித்து இன்னும்பல தகவல்களுடன் உங்களுக்காகக் காத்திருக்கிறார்... ஆன்மிகச் சொற்பொழிவாளர் மணிகண்டன்

* சாதாரண கட்டணம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick