'சங்கு' திருத்தலங்கள்!

றைவழிபாட்டில் சங்குக்கு பெரும்பங்கு உண்டு. வலம்புரிச் சங்கு இருக்கும் இடத்தில் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. இந்த வரிசையில் தேவர்களும் அசுரர்களும் வழிபட்ட சங்கு வடிவிலான சிவாலயங்கள் குறித்த தகவல்களும் உண்டு. இந்த ஆலயங்களை சங்கீஸ்வரங்கள் என்பார்கள்.

கும்பகோணத்தை அடுத்த பழையாறையில் சங்கீச்சரம் எனும் ஆலயம் இருந்ததை ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டு கூறுகிறது. கோயம்புத்தூரில் கோட்டை சங்கமேசுவரர் ஆலயம் கல்வெட்டுக்களில் சங்கீசுவரம் என்றே குறிக்கப்பட்டுள்ளது. திருக்குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் ஆலயமும் சங்கு கோயில் என்று அழைக்கப்படுகிறது.  இது சங்கு வடிவில் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்