'நூறு பூஜை பலன் நிச்சயம்!’

152-வது திருவிளக்கு பூஜைதிருவாரூர் பூஜையில் வாசகி பூரிப்பு!

''ஒரு தீக்குச்சியைக் கிழித்து நெருப்பை உண்டு பண்ணினால், பெண்கள் விளக்கேற்றப் போகிறார்கள் என்றும், சமையல் செய்து வீட்டாரின் பசியை ஆற்றப் போகிறார்கள் என்றும் அர்த்தம். ஆனால், ஒரு ஆண் தீக்குச்சியைக் கிழித்தால், அதை நெருப்புப் பற்ற வைத்துவிட்டதாகத்தான் சொல்வார்கள். பொறுமையும் நிதானமும் பெண்களுக்கு இரண்டு கண்கள். எனவே, பொறுமையுடனும் நிதானத்துடனும் திகழ்கிற பெண்களுக்குத்தான் விளக்குபூஜையைக் கொடுத்திருக்கிறது, இந்து மதம்'' என்று புலவர் ரெ.சண்முகவடிவேல் பேசினார். 'அட’ என்று வியந்து கேட்டுக் கொண்டிருந்தது கூட்டம்.

சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, திருவாரூர் பவித்திர மாணிக்கத்தில் உள்ள ஸ்ரீருத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்றது. சக்திவிகடனின் 152வது விளக்கு பூஜை இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்