துங்கா நதி தீரத்தில்... - 18

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
குரு தரிசனம்!பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம்: ஸ்யாம்

ஸ்ரீசச்சிதானந்த சிவ அபிநவ நரஸிம்ம பாரதி ஸ்வாமிகளிடத்தில், குருவின் கிருபையினால் அனைத்துவிதமான ஸித்திகளும் தானாகவே ஏற்பட்டிருந்தன என்பதையும், அனைத்து ஜீவன்களிடத்தும் அவர் சமபாவத்துடனே அன்பும் கருணையும் காட்டினார் என்பதையும் பார்த்தோம். பலவிதமான நோய்களால் பாதிக்கப்படுகிறவர்களும், லோகாயத பிரச்னைகளால் துன்பப்படுபவர்களும் ஸ்வாமிகளிடத்தில் வந்து பிரார்த்திப்பது உண்டு. ஸ்வாமிகளும் ஸ்ரீசாரதாம்பிகையின்பேரில் பாரத்தைப் போட்டுவிட்டு, விபூதியோ தீர்த்தமோ அபிமந்த்ரணம் செய்துகொடுத்து, அவரவர்களுடைய துன்பங்களை நீக்கி, அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார்கள். ஸ்வாமிகளின் அனுக்கிரஹத்தினால் பயன் அடைந்த அன்பர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.

அப்படித்தான், ஸ்வாமிகள் ஓரிடத்தில் முகாம் அமைத்திருந்தபோது, நாகர்கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள ஆச்ராமம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமண்ய சாஸ்திரி என்பவர், ஸ்வாமி களைத் தரிசிக்க வந்திருந்தார். அவருக்குப் பேசும் திறனற்ற, காது கேளாத ஒரு மகன் இருந்தான். அவர் தன்னுடைய மனக்குறையை ஸ்வாமிகளிடம் சொல்லிப் பிரார்த்தித்துக் கொண்டார். ஸ்வாமிகளும் அவருடைய பிள்ளையிடம் கருணை கொண்டவராக ஒரு மந்திரத்தை உபதேசித்து, அதைத் தீர்த்தத்தில் அபிமந்த்ரணம் செய்து, பிள்ளைக்குக் கொடுக்குமாறு செய்தார். ஸ்வாமிகளின் அனுக்கிரஹத்தினால் அந்தப் பிள்ளை பேசும் திறனையும் கேட்கும் திறனையும் பெற்று, உபநயனமும் செய்விக்கப் பெற்றான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்