கடவுள் அறிவோம்! - 4

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சந்தோஷ வாழ்வு தரும் ஸ்ரீசரபேஸ்வரர் தி.தெய்வநாயகம், ஓவியம்: பத்மவாசன்

ஸ்ரீசரபேஸ்வரர் - சந்தோஷம் நிலைத்திருக்க வரம் அருளும், தெய்வ மூர்த்தம். 'தீ, பூகம்பம், மண் மாரி, இடி, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களும் பேராபத்துகளும் நீங்கவும், பரிகாரம் செய்ய  முடியாத கஷ்டங்கள், வைத்தியர்களாலும் தீர்க்க முடியாத பிணிகள் ஆகியன அகலவும், தீவினைகள், விஷ பயம் போன்ற உபாதைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கவும் ஸ்ரீசரபரை வழிபட வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார் வியாசர்.

பக்த பிரகலாதனைக் காக்க ஸ்ரீமந் நாராயணன் நரசிம்மமாய் அவதரித்து இரண்யகசிபுவை அழித்தருளிய திருக்கதை நாமறிந்ததே. அவ்வாறு அசுரனை அழித்தும் ஸ்ரீநரசிம்மரின் ஆக்ரோஷம் தணியவில்லையாம். இதனால் அஞ்சி நடுங்கிய தேவர்கள் சிவனாரைச் சரணடைந்தனர். அவர்களுக்கு அருள திருவுளம் கொண்டு, நரசிம்மத்தின் கோபம் தணிக்க சிவபெருமான் எடுத்த  திருக்கோலமே ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தம் என்கின்றன புராணங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்