சந்தோஷமும் சமாதானமும் தரும் மகா சாந்தி மகா யாக பூஜை!

வேள்வி தரிசனம்!

''தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பார்கள். உலகில் உள்ள அனைவருமே அன்னையின் மூலமாகவே பிறந்தோம். அந்த அன்னையையும் இன்னொரு அன்னைதான் ஈன்றெடுத்தாள். அதனால்தான் அம்மா, மனைவி, மகள், பேத்தி என எந்த உறவில் இருந்தாலும், உலகத்துப் பெண்கள் அனைவரையும் மகாசக்தியாகவே பார்க்கிறது இந்து மதம். அப்படி, சக்தியின் அம்சமாகத் திகழும் பெண்களையே போற்றிக் கொண்டாட வேண்டும் எனும்போது, உலகுக்கே தாயாகத் திகழும் பராசக்தியை இன்னும் எவ்வளவு கொண்டாட வேண்டும்?! அந்தக் கொண்டாட்டத்தின் வகைகள்தான் அம்பிகைக்கு அபிஷேகம் செய்வது, அலங்காரங்கள் பண்ணுவது, பூமாலைகள் சூட்டுவது, நைவேத்தியங்கள் படைப்பது, தீபதூப ஆராதனைகள் மேற்கொள்வது, யாகங்கள் வளர்ப்பது என சொல்லிக்கொண்டே போகலாம்'' என்கிறார், சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலின் சண்முக சிவாச்சார்யர்.

சென்னை - பாரிமுனையில், தம்புசெட்டித் தெருவில் உள்ளது ஸ்ரீகாளி காம்பாள் திருக்கோயில். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த அற்புதத் தலம் இது. இங்கே ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியும் பிரமாண்டமாக தரிசனம் தந்து, தீயவற்றை அழித்து, நல்லனவற்றைப் பெருக்கி அருள்பாலிக்கிறாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்