ஹலோ விகடன் - அருளோசை

ன்னை சாரதாதேவியை அம்பாளாகவே கண்டு வழிபட்டார் ஸ்ரீராமகிருஷ்ணர். எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகிய அன்னை சாரதாதேவி, அன்பின் திருஉருவமாகத் திகழ்ந்தார். கருணையின் வடிவமாக விளங்கிய அன்னை தன்னைத் தாக்க வந்த கள்வனிடத்திலும் கருணை கொண்டிருந்தார். தனது தூய அன்பினால் கயவர்கள் பலரையும் கருணைமிக்கவர்களாக மாற்றிய பெருமை அன்னை சாரதாதேவியைச் சேரும். பிறருக்கு உதவி செய்வதையே தன்னுடைய பிறவிப் பயனாகக் கொண்டிருந்தார் அவர்.

அன்னை சாரதாதேவிக்கு டிசம்பர் 13 அன்று 162வது ஜயந்திவிழா உலகெங்கிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறது.

அன்னை சாரதாதேவியின் வாழ்வில் நடந்த பல சிலிர்ப்பூட்டும் நிகழ்வுகளை நீங்களும் அறிந்துகொள்ள...

tel:+(91)-44-66802913 *

இந்த எண்ணுக்கு டயல் செய்யுங்கள். அன்னை சாரதாதேவி பற்றிய பல அரிய தகவல்களை (9.12.14 முதல் 15.12.14 வரை) உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்...

சுவாமி விமூர்த்தானந்தர்,  

ஆசிரியர், ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்


ஞ்சரத்தின ஸ்லோகத்தைக் கேட்டால் மகிழ்ந்து போவாராம் ஐயப்ப சுவாமிகள்.  பரசுராமர் பாடிய இந்த ஸ்லோகத்தைப் பாடித்தான் தேவர்கள்  ஐயனை வழிபடுவார்கள். மலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் தினமும் இந்த ஸ்லோகத்தைப் பாடி பூஜித்து வந்தால், நிச்சயம் ஐயன் மனம் குளிர்ந்து அருள்புரிவார். அத்தகைய மகிமை மிக்க பஞ்சரத்தின ஸ்லோகத்தை உங்களுக்கும் சொல்கிறேன் கேளுங்கள்.  

எல்லோரும் 'சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கிறேன்’ என்பார்கள்; 'விரதம் இருக்கிறேன்’ என்பார்கள். ஆனால், உண்மையில் நமக்காகத்தான், நம் நன்மைக்காகத்தான் சபரிமலையில் விரதம் இருக்கிறார் சாஸ்தா. நமக்காக விரதம் இருக்கும் ஐயனை மனம் முழுவதும் நினைத்து, நம் பாரங்களை அவர்மீது போட்டுவிட்டு மலை ஏறினால், நிச்சயம் அவர் நமக்குக் காட்சியளிப்பார். எனக்கும் ஒருமுறை காட்சியளித்தார். அந்த அற்புத அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

tel:+(91)-44-66802913 *

என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். ஐயப்பனின் அருள் சுரக்கும் லீலைகளை (16.12.14 முதல் 22.12.14 வரை) கேளுங்களேன்.

  வீரமணிராஜூ

* சாதாரண கட்டணம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick