விரல்களும்...கிரகங்களும்!

உள்ளங்கையில் சில உண்மைகள்சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

ள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடையேயான கோண அளவு, கட்டைவிரலின் பாகங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், அந்த விரலுக்குச் சொந்தமானவரின் குண நலன்களை, அவர் அடையப் போகும் பலாபலன்களை விரிவாகப் பார்த்தோம். இனி, கட்டைவிரல் அமைந்திருக்கும் அளவின் அடிப்படையிலான பலன்களைக் காணலாம்.

1. குட்டையான கட்டை விரல்...

இவர்கள் சுயமாகச் சிந்தித்து, செயலாற்ற முடியாதவர்கள். எப்போதுமே பிறர் அபிப்பிராயப்படி நடக்க விரும்புகிறவர்கள். அறிவாற்றலைவிட, உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள். கவிதை, சங்கீதம், கலை போன்ற துறைகளில் ஈடுபாடு கொண்ட சிலரும், அரசாங்கத்தில் நடுத்தரமான பதவி வகிப்பவர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். (படம் - 1)

2. நீளமான கட்டை விரல்...

மிகுந்த தன்னம்பிக்கையும், சாமர்த்தியமும் கொண்டவர்கள். பிறர் மீது அதிகாரம் செலுத்தும் வல்லமை உள்ளவர்கள். உணர்ச்சிகளைவிட, அறிவாற்றலுக்கு முக்கியத்துவம் தருபவர்கள். துணிவு உள்ளவர்கள். விஞ்ஞானம், அறிவியல் போன்ற துறையில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு நீண்ட கட்டை விரல் இருக்கும். (படம் - 2)

3. கடினமான கட்டை விரல்...

கட்டைவிரல் நேராகவும் தசைப்பகுதி கடினமாகவும், தடித்தும் இருந்தால், அவர்கள் இந்த வகையைச் சேர்வார்கள். இத்தகையவர்கள், மிகவும் பிடிவாதக் குணமுள்ளவர்கள். தான் எண்ணியதே ‘சரி’ என நினைப்பவர்கள். பிறர் அறிவுக்கோ, உணர்வுக்கோ அவ்வளவாக மதிப்புத் தராதவர்கள். தன் திறமையில் மட்டுமே நம்பிக்கைக் கொண்டவர்கள். (படம் - 3)

4. மிருதுவாக வளைந்து கொடுக்கக்கூடிய கட்டைவிரல்...

சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு வாழத் தெரிந்தவர்கள். பொருள்களிடத்தும் செல்வங்களிடத்தும் பற்று கொண்டவர்கள். தங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள். (படம் - 4)

பொதுவாக கட்டைவிரலில் மேல்பாகம், கீழ்ப்பாகம் என்று இரண்டு பகுதிகள் உண்டு. கட்டை விரலை மடக்கிப் பார்த்தால், மேல் பகுதியின் நீளத்தையும், கீழ் பகுதியின் நீளத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அதை வைத்து கட்டை விரலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

மேல் பகுதி நீளமாக உள்ள கட்டைவிரல்...

தீவிரமான சிந்தனை, வைராக்கியம், செயலாற்றும் துணிவு கொண்டவர்கள், நியாய உணர்வு கொண்டவர்கள்.

கீழ்ப்பகுதி நீளமாக உள்ள கட்டைவிரல்...

இவர்கள் வேகமாகவும், துரிதமாகவும் செயல்படக் கூடியவர்கள். அதனால் எடுக்கும் முடிவில் தவறுகள் நேரிட வாய்ப்புகள் உண்டு.

இத்தகைய குணாதிசயங்களைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப ஒருவரது நடத்தையையும் ஓரளவு மாற்றிக்கொண்டு, குறைகளை நீக்கிக் கொள்ள முயல்வது அறிவுடைமையாகும்.

இனி கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களின் அமைப்பையும் தன்மையையும் அறிவோம்.

கட்டை விரல் தவிர மற்ற விரல்களை சாதாரணமாக ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல் என்று சொல்கிறோம். இவற்றுக்கு பஞ்சாங் குலியில் வேறு பெயர்கள் உண்டு. அவை முறையே குரு விரல், சனி விரல், சூரிய விரல், புத விரல் ஆகும். உள்ளங்கையில் முறையே குரு மேடு, சனி மேடு, சூரிய மேடு, புத மேடு ஆகியவற்றிலிருந்து தொடங்கும் விரல்கள் இவை.

குரு விரல் அல்லது பிரகஸ்பதி விரல்

இது கட்டை விரலுக்கு அடுத்துள்ள விரல். உள்ளங்கை குரு மேட்டில் உற்பத்தியாகும் இந்த விரலுக்கு குரு விரல் என்று பெயர். இதை சம்ஸ் கிருதத்தில் ‘தர்ஜனி’ என்று குறிப்பிடுகிறார்கள். ஒருவனது ஞானம், கல்வி, திறமை ஆகியவற்றை இந்த விரல் அமைப்பு குறிப்பிடுகிறது.

சனி விரல்

நடுவிரல் அல்லது பெரு விரல் என்று குறிப்பிடப் படும் இது, உள்ளங்கை சனி மேட்டில் உற்பத்தியாவ தால், சனி விரல் எனப்படுகிறது. இதனை வடமொழியில் ‘மத்தியமா’ என்கிறோம். ஒருவனது வெற்றி, செல்வம், செல்வாக்கு முதலியவற்றை இந்த விரலின் அமைப்பு விளக்குகிறது.

சூரிய விரல்

கட்டை விரலுக்கு மூன்றாவதாக சூரிய மேட்டில் உற்பத்தியாகும் இந்த விரல் சூரிய விரல். இது மோதிர விரல் என்று குறிப்பிடப்படுகிறது. இதை பவித்திர விரல் என்றும் குறிப்பிடுவார்கள். அதனால்தான், பூஜை, புனஸ்காரங்கள் செய்யும் பொழுது, தர்ப்பையால் ஆன பவித்திரத்தை இந்த விரலில் அணிகிறோம். இதற்கு வடமொழியில் ‘அனாமிகா’ என்று பெயர். ஒரு மனிதனின் புகழ், பெருமை, இந்த விரலின் அமைப்பால் தெரியும்.

புதன் விரல்

கனிஷ்டிகா என்று குறிப்பிடப்படும் இதை, சுண்டு விரல் என்கிறோம். புதன் மேட்டில் உற்பத்தியாகும் இந்த விரல், புதன் விரல் எனப்படும். இதன் அமைப்பு திருமணம் குடும்ப வாழ்க்கைப் பற்றிய பல விவரங்களைத் தருகிறது.

அடுத்ததாக, ஒட்டுமொத்தமாக விரல்களின் அமைப்பைக் கொண்டு சில விவரங்களைக் காண்போம்.

விரல்கள் உள்ளங்கைகளை நோக்கி வளைந்திருக் குமானால் (படம் - 5) அவர்களுக்கு உலகப் பற்றுடன், தன்னைப் பற்றிய சிந்தனையும், சுய நலமும் மிகுதியாக இருக்கும். அவர்கள் தமது காரியங்களில் சிரத்தையாகவும் கவனமாகவும், ஈடுபாட்டுடனும் செயல்படுவார்கள்.

விரல்கள் புறங்கைப் பக்கமாக வளைந்திருந்தால், (படம் - 6) அவர்கள் பிறர் நலம் கருதுபவர்களாகவும், தாராள மனப்பான்மை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

இரண்டு விரல்களுக்கு இடையே உள்ள இடை வெளியும் ஓரளவு சில குணங்களை பிரதிபலிக்கும்.

1. கட்டை விரலுக்கும், குரு விரலுக்கும் இடையே இடைவெளி அதிகமாக இருந்தால், (படம் - 7) அவர்கள் அன்பு, பண்பு, மனித நேயம் உடையவர்களாக இருப்பார்கள்.

2. குரு விரலுக்கும், சனி விரலுக்கும் மத்தியில் அதிகமாக இடைவெளி இருக்குமானால் (படம் - 8) அவர்கள் சுயமாக சிந்தித்து செயல்படுபவர்கள். மனதில் பட்டதைப் பளிச்சென்று சொல்பவர்கள்.

3. சனி விரலுக்கும் சூரிய விரலுக்கும் அதிக இடைவெளி இருந்தால் (படம் - 9) அவர்கள் பொருளையும், வசதியையும் மட்டும் விரும்புபவர்கள், புகழுக்காக பொருளைத் தியாகம் செய்யாதவர்கள்.

4. சூரிய விரலுக்கும், புதன் விரலுக்கும் மத்தியில் இடைவெளி அதிகமாக இருந்தால், (படம் - 10) அவர்கள் குற்றம் செய்வதிலும், பிறருக்கு தீங்கு இழைப்பதிலும் விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

விரல்களின் மொத்த தோற்றத்தை வைத்து, அவற்றைக் கூர்மையான விரல்கள் என்றும், தட்டையான விரல்கள் என்றும் பிரிக்கலாம்.

1. விரலின் அடிப்பாகத்தில் இருந்து மேல்பாகம் கூர்மையாக அமைந்தால், அவர்கள் உயர்ந்த எண்ணங்கள், உயர்ந்த செயல்கள், கலைத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். இந்த அன்பர்களிடம் மனிதநேயம் மிகுந்திருக்கும். தத்துவ மேதைகள், ஆன்மிக ஞானிகள், கலைஞர்கள் ஆகியோரின் விரல்கள், இந்த அமைப்பைப் பெற்றிருக்கும்.

2. விரல் நுனிகள் தட்டையாக இருந்தால், அவர்கள் திறமையாக வேலை செய்பவர்களாகவும், கடுமையான உழைப்பாளிகளாகவும், பிறரோடு சேர்ந்து வேலை செய்வதில், திறமை மிக்கவர்களா கவும், எடுத்த காரியத்தை திறம்பட முடிப்பவர்களா கவும் இருப்பார்கள். தொழில் அதிபர்கள், அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்கள், விளையாட்டு வீரர்கள், திறமைமிக்க தொழிலாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களின் விரல்கள், இந்த அமைப்பைக் கொண்டிருக்கும்.

ஒரு சில விரல்கள் முதல் வகை அமைப்பிலும், மற்ற விரல்கள் இரண்டாவது வடிவமைப்பிலும் இருந்தால், அவர்கள் மேலே குறிப்பிட்ட இரண்டு குணங்களும் கலந்தவர்களாக இருப்பார்கள்.

உள்ளங்கை மேடுகள்...

பஞ்சாங்குலி எனும் ரேகை சாஸ்திரத்தின் முந்தைய பகுதிகளில் கையின் அமைப்பு, விரல்களின் அமைப்பு, ஆகியவற்றை வைத்து மனிதர்களின் குணாதிசயங்கள், வாழ்க்கை அமைப்பு, பாதிப்புகள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொண்டோம். அதைத் தொடர்வது கைரேகை சாஸ்திரத்தின் ஒரு முக்கியமான பகுதி; உள்ளங்கையில் உள்ள மேடுகள் பற்றியது.

உள்ளங்கையில் சதைப்பற்று மிக்க பகுதிகள் மேடுகளாக அமைந்துள்ளன. ஒவ்வொரு மேடும் நமது வாழ்க்கையின் ஒரு சில அம்சங்களைக் கட்டுப் படுத்தும் கேந்திரங்கள் ஆகும். நமது வெவ்வேறு குணாதிசயங்களை உருவாக்கும் ஸ்தானங்கள் அவை. ஒவ்வொன்றுக்கும் ஒரு கிரகம் அதிபதி. ஒவ்வொரு மேட்டுக்கும் அந்தக் கிரகத்துக்கு உரிய ஓர் அடையாளக் குறி உண்டு.

இதுபற்றி விரிவாகக் காண்போம்.

- தொடரும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick