ஹலோ விகடன் - அருளோசை

'நீங்கள் இறைவனைப் பார்த்திருக்கிறீர்களா?' என்று திருநாவுக்கரசரிடம் கேட்டார் அன்பர் ஒருவர். ''ஆமாம், பார்த்திருக்கிறேனே...' என்று பெருமிதத்துடன் சொன்னார் நாவுக்கரசர். அதைக் கேட்டதும் அந்த அன்பர் வருத்தத்துடன், ''கடவுளைக் காண தவமாய் தவமிருந்தும் பலரால் பார்க்க முடியவில்லையே. நீங்கள் எப்படிப் பார்த்தீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு நாவுக்கரசர், ''எல்லோரும் கடவுளை வெளியே தேடிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நானோ, எனக்குள்ளேயே இருக்கிறார் என உணர்ந்தேன். கண்டுகொண்டேன்'' என்றார்.

உங்களுக்குள்ளேயே இறைவன் இருக்கிறான் என்பதை நாவுக்கரசர் தன் பாடலில் சொன்னது போல, இன்னும் பலரின் சுவாரஸ்யங்கள்... தகவல்கள்!

வரும் 28.10.14 முதல் 3.11.14 வரை தினமும் ஒரு சேதி சொல்கிறேன்.

tel:+(91)-44-66802913 *

என்ற எண்ணுக்கு டயல் செய்து கேளுங்கள். பரவசமாவீர்கள்!

இப்படிக்கு

திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன்


''சாஸ்தா என்றால் கட்டளையிடுபவன் என்று அர்த்தம். பஞ்ச பூத சக்திகளையும், தான் நினைத்தபடி செயல்படச் செய்யும் வல்லமை கொண்டவர் சபரிகிரி ஐயன்... ஐயப்ப ஸ்வாமி!

மார்கழி மாதத்தில் ஐயப்ப ஸ்வாமியைத் தரிசிக்க, கார்த்திகையில் விரதம் துவங்குகிறோம். எத்தனை நாள் விரதம், எப்படி விரதம் மேற்கொள்வது, மாலை எதற்காக அணியவேண்டும், நெய்த்தேங்காய் எதற்காக, இருமுடி என்றால் என்ன, இருமுடியின் தாத்பரியம் என்ன... என்பது பற்றியெல்லாம் தெரிந்து உணர்ந்து, கடைப்பிடிப்போமே!

4.11.14 முதல் 10.11.14 வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல். சொல்லச் சொல்ல, கேட்கக் கேட்க திகட்டாத ஐயப்ப ஸ்வாமியின் பெருமைகளையும் அருளாடல்களையும் சொல்கிறேன். கேளுங்களேன்!  

tel:+(91)-44-66802913 *

... என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள்.''

இப்படிக்கு

அரவிந்த் சுப்ரமணியம்

* சாதாரண கட்டணம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick