காஞ்சியில் கார்த்திகை!

கார்த்திகை மாதத்தை ராசியின் பெயரால் விருச்சிக மாதம் என்பர். இந்த வீடு அனல் கிரகமான செவ்வாயின் வீடாகும். சூரியனுக்கு இம்மாதத்தில் வழிபாடு செய்வதால், பரம்பரை சொத்துக்களால் பயன் உண்டாகும்; அவை நம்மைவிட்டுப் போகாது. கண் சம்பந்தமான நோய்கள் அணுகாது; பார்வையின் சக்தி மேம்படும்.

கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் சூரியனை வழிபடுவதும், ஜோதிர்லிங்கங்களை வழிபடுவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரும். காஞ்சியில் அருளும் சிவாலயங்களில் ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயமும் ஒன்று. கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் மூழ்கி அதன் கரையில் உள்ள இஷ்டலிங்க பெருமானையும், கச்சபேசப் பெருமானையும் வழிபட்டால் நினைத்தவை நல்லபடியே நடக்கும், வாழ்வில் மங்கலங்கள் உண்டாகும், கண்ணொளி மேம்படும், தலை சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்கின்றன புராணங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்