ஹலோ விகடன் - அருளோசை

துதி பாடி வேண்டுவோம்!

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிக முக்கிய பங்கு வகிப்பது இறை வழிபாடு. அப்படி வழிபடுகிறபோது, துதி பாடி, கடவுளைப் போற்றி வழிபடுவது கூடுதல் சிறப்பையும் பலனையும் வழங்கும். பாடி வேண்டிக் கொண்டால், பரவசமும் மன அமைதியும் கிடைக்கும் என்பது உறுதி!

ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனியே துதிகள் உண்டு. அவற்றை உரிய முறையில் சொல்லச் சொல்ல, நம் வாழ்க்கை இனிக்கும்!  எந்த நாளில், எந்தத் தெய்வத்தை எந்தத் துதி கொண்டு வழிபடலாம் என்பதை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். வரும் 11.11.2014 முதல் 17.11.14 வரை தினமும் ஒரு துதியைச் சொல்கிறேன். கேளுங்கள். பரவசமாவீர்கள்.

tel:+(91)-44-66802913 *

என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள்.

இப்படிக்கு

காரைக்கால். ந.விஜயலட்சுமி


தீப மகிமையை அறிவோம்!  

கார்த்திகை தீபம் என்றாலே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் திருத்தலம் திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலத்தில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா ரொம்பவே விசேஷம். தீபம் மகத்துவமானது. தினமும் அதிகாலையில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால் நம் இல்லமும் உள்ளமும் ஒளி பெறும்.

அதேபோன்று தீபம் ஏற்ற பயன்படுத்துகிற எண்ணெயிலும் கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றுவதற்கும் ஒவ்வொரு பலன்் உண்டு. நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கினால், யமபயம் நீங்கும். தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றி வழிபட்டால், தேக ஆரோக்கியம் கூடும்.

இதுபோன்ற தீபத் தகவல்களையும் கார்த்திகை தீபப் பெருமைகளையும் 18.11.14 முதல் 24.11.14 வரை தினமும் ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.

tel:+(91)-44-66802913 *

என்ற எண்ணுக்கு டயல் செய்து தீப மகிமையைக் கேளுங்கள். எல்லையில்லாப் பயனைப் பெறுவீர்கள்!

இப்படிக்கு

ஆரூர்.எஸ்.சுந்தரராமன்

* சாதாரண கட்டணம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick