எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!

கே.ஸ்ரீ

குழந்தை பிறந்ததும், அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா நடைபெறும். அந்தப் பெயர் நல்ல பெயராக இருக்க வேண்டும். குறிப்பாக, தெய்வத்தின் பெயரையோ, முன்னோர்களின் பெயரையோ சூட்டுவது வழக்கம். இந்தக் காலத்தில், தங்கள் குழந்தைக்கு நாகரிகமான பெயர்களைச் சூட்டவே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். நாகரிகம் என்ற பெயரில் பொருத்தமில்லாத பெயர்கள் வைப்பதைத் தவிர்த்துவிட்டு, தங்கள் குழந்தை பிறந்த தேதி, நட்சத்திரம் போன்றவற்றின் அடிப்படையில் பெயர் வைத்தால், அந்தக் குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும். காரணம், பெயர் என்பது ஒரு குழந்தையை அடையாளப்படுத்த மட்டுமல்ல; அதற்கு ஒரு சக்தி இருக்கிறது. அது அந்தக் குழந்தையின் குணாம்சத்தை வடிவமைப்பதில் பங்கு கொள்கிறது.

பெயருக்கான சக்தி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல; தெய்வங்களுக்கும் உண்டு. தெய்வத்தைவிடவும் தெய்வத்தின் திருப் பெயர்களுக்கு சக்தி அதிகம். அதனால்தான், ராமனை வணங்குவதைவிட ராம நாமத்தை ஜபிப்பது இன்னும் அதிக நன்மைகளைத் தரும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்