நந்திக்காக... ஐயாறப்பரின் ஏழூர் திருவுலா!

தில்லி ரா.வைத்தியநாதன்படங்கள்: ஜெ.சுந்தரமூர்த்தி

ப்தஸ்தான தலங்கள் என்பவை மனித உடலில் உள்ள மூலாதாரம் தொடங்கி சஹஸ்ராரம் வரை உள்ள சக்கரங்களைக் குறிப்பிடும் வகையில் அமைந்திருக்கும் திருத்தலங்களாகும். இந்த ஏழு திருத்தலங்களையும் இணைக்கும் வகையில் நடைபெறுவது, சப்தஸ்தான பல்லக்குத் திருவிழா! நந்திதேவரின் திருமண வைபவத்தை ஒட்டி நடைபெறும் இந்த விழாவின் சிறப்பு பற்றி, 'நந்தி கல்யாணம் தரிசித்தால் முந்தி கல்யாணம்’ என்று சொல்லப்பட்டு இருக்கிறது. 

நந்திதேவர் சிவ பெருமானின் முதன்மைச் சீடராவார். துர்வாச முனிவருடைய சீடர் சிலாத முனிவர். அவர் வசிஷ்டரின் சகோதரி சாருலட்சணையை மணந்தார். இந்த தம்பதி குழந்தை வரம் வேண்டி தவம் புரிந்ததனால் ஐயாறப்பரின் திருவருள் கைகூடியது. ஸ்வாமியின் ஆக்ஞைப்படி சிலாத முனிவர், அந்தணர் குறிச்சி எனும் இடத்தில் வேள்விக்காக நிலத்தை உழுதபோது, ஒரு செப்புப் பெட்டகத்தில் சிவவடிவுடன் கூடிய குழந்தை கிடைத்தது. குழந்தைக்கு ஜப்பேசன் என்று பெயரிட்டு வளர்த்தனர். அந்தக் குழந்தை நாளடைவில் எல்லா கலைகளிலும், ஆகம புராண சாஸ்திரங்களிலும் வல்லுநராயிற்று. சிவபெருமான் அவருக்கு நந்தீஸ்வரன் என்று பெயர் சூட்டி, முதல் குருநாதன் என்ற தகுதியைையும் அளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்