‘பெண்களின் வடிவில் அம்பிகையே செய்யும் விளக்கு பூஜை!’

ரெ.சு.வெங்கடேஷ், படங்கள்: தே.தீட்ஷித்

'கைவிளக்கின் பின்னேபோய்க் காண்பார்போல் மெய்ஞ்ஞான மெய்விளக்கின் பின்னேபோய் மெய்காண்ப தெந்நாளோ?’  இருட்டில் ஒரு பொருளைத் தொலைத்துவிட்டால், எப்படி ஒரு விளக்கின் துணை கொண்டு அந்தப் பொருளைத் தேடுகிறோமோ, அப்படி நம் மனத்தை மறைத்திருக்கும் அஞ்ஞானமாகிய இருட்டில் இருந்து, சத்தியமாகிற மெய்ஞ்ஞான விளக்கின் துணை கொண்டு அந்தப் பரமனைக் காண்பது எந்நாளோ?’ என்று தாயுமானவர் பாடி இருக்கிறார்.

 மெய்ஞ்ஞானம் என்னும் அந்த ஒளியைப் பெற்று, நம்முடைய மன அழுக்குகளை எல்லாம் அகற்றிக் கொள்வதற்கான முதல் படிநிலையே விளக்கு பூஜை. அதிலும், இந்த விளக்கு பூஜை இறைவியின் அம்சமாகப் போற்றப்படும் பெண்களால் நடத்தப் பெறுவது மிகவும் விசேஷமானது! இந்த பூஜையின் பயனாக இதில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்குமே நல்லதே நடக்கும்'' என்று பேராசிரியர் தி.வெ.இராசேந்திரன் பேசப்பேச, வாசகியர் அனைவரின் முகங்களிலும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பின் சிறப்பினை உணர்ந்த பரவசம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்