ஆலயம் தேடுவோம்

ராமரும் சீதையும் வழிபட்ட ஆலயம்!ராமர் பாதம் பட்ட மலை...சேக்கிழார் வலம் வந்த குன்று... ரெ.சு.வெங்கடேஷ், படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

ரத்தில் கனிந்திருக்கும் பழங்களைக் கொத்தித் தின்னும் பறவைகள், அந்தப் பழங்களின் விதைகளை எச்சமாக வெவ்வேறு இடங்களில் தூவிவிட்டுச் செல்லும். அந்த விதைகள் வேர் பிடித்து, மரமாய் வளர்ந்து மண்ணுக்கும் மக்களுக்கும் பயன் தருவது போலவே, ஆன்மிகம் என்னும் பழத்தை அனுபவித்துப் பரம்பொருளை உணர்ந்த சான்றோர், ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என ஆங்காங்கே கோயில்களை உருவாக்கிச் சென்றுள்ளனர். காலப்போக்கில் அந்தப் பொக்கிஷங்கள், மக்களின் அறியாமை காரணமாகப் பொலிவிழந்து போயின.  அப்படி ஒரு கோயில்தான் ‘ஆலயம் தேடுவோம்’ பகுதிக்காக இப்போது நாம் தரிசித்துக்கொண்டிருக்கும் ராமநாதீஸ்வரர் கோயில்.

குன்றத்தூர்- ஸ்ரீ பெரும்புதூர் சாலையில், குன்றத்தூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள சிறுகளத்தூரில், ஒரு சிறிய குன்றின்மேல் அமைந்திருக்கிறது ஸ்ரீராமநாதீஸ்வரர் திருக்கோயில்.
சித்தமெல்லாம் சிவமே நிறைந்திருக்க, தம்மை சிவத் திருப்பணிக்கே அர்ப்பணித்துக்கொண்ட சிவனடியார்கள் பலர். அவர்களுடைய பெருமையை உலகமெல்லாம் அறியுமாறு செய்தவர் தெய்வப் புலவர் சேக்கிழார். அவர் பிறந்த குன்றத்தூருக்கு அருகிலேயே அமைந்திருக்கும் இந்தத் திருக்கோயில் அவரால் வழிபடப்பட்ட சிறப்பையும் கொண்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்